இந்தியத் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் ஒரு பகுதியாக செயல்பட்டு வரும் ‘இந்திய கணினி அவசர உதவிக் குழு (CERT-In)’ அவ்வபோது ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள், ஐபேட்கள், ஆப்பிள் டிவி, மேக் மற்றும் ஆப்பிள் வாட்சுகளை பயன்படுத்துவோர் அதனை உடனடியாக அப்டேட் செய்யும் படி, அடிக்கடி எச்சரிக்கைகளை வெளியிட்டு வருகிறது.
மால்வேர் வைரஸ் மூலமாக ஹேக்கர்கள் யூஸர்களின் டேட்டா, பேங்க் அக்கவுண்ட் விவரங்கள் ஆகியவற்றை திருட முயற்சிக்கலாம் என்பது முன்கூட்டியே கண்டுபிடிக்கப்படுகிறது. இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் தமது வாடிக்கையாளர்களின் டேட்டாவை பாதுகாக்கும் நோக்கில், iPhone, iPad மற்றும் Mac-களுக்கான ‘லாக்டவுன் மோட்’ என்கிற புதிய அம்சத்தை அறிவித்துள்ளது. யூஸர் ப்ரைவஸியை அடிப்படையாக கொண்ட இந்த புதிய அம்சமானது iOS 16, iPadOS 16 மற்றும் macOS Ventura ஆகியவற்றில், இந்த 2022 ஆம் ஆண்டின் இறுதிக்குள் வெளிவரும் என்பதும் உறுதிசெய்யப்பட்டுள்ளது
உலகெங்கிலும் உள்ள அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் நிர்வாகிகளின் தொலைபேசிகளில் ஊடுருவப் பயன்படுத்தப்படும் ஸ்பைவேரான பெகாசஸ் போன்ற ஸ்பைவேர்களிடம் இருந்து ஐபோன் யூஸர்களை பாதுகாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கூடுதலாக இந்த லாக்டவுன் அம்சம் மூலமாக, மெசேஜ்கள் மூலம் அனுப்பப்படும் லிங்குகள், போலி URLகளை கொண்ட தளங்கள், இன்டர்நெட் ப்ரவுஸிங் மற்றும், ஃபேஸ்டைம், கால்ஸ் போன்றவற்றின் மூலமாக அத்துமீறி நுழையக்கூடிய ஹேக் மற்றும் ஸ்பைவேர் தாக்குதலையும் தடுக்க முடியும். இதன் மூலம் ஐபோன் யூஸர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. அதாவது லாக்டவுன் அம்சமானது டிஜிட்டல் அல்லது பிசிக்கல் என இரண்டு முறையில் ஹேக் செய்யப்படுவதை தடுக்கிறது.
ஐபோனில் லாக்டவுன் அம்சம் செயல்படுத்தப்படும் போது, அது சாதனங்கள் எந்த புதிய புரோபைல் தகவலையும் உள்ளீடு செய்ய அனுமதிக்காது. அலுவலகங்களில் IT நிர்வாகிகள் பயன்படுத்தும் மொபைல் சாதனத்தையும் நிர்வகிக்க அனுமதிக்கப்படாது. ஆப்பிள் நிறுவனத்தின் கருத்து படி, “தனிப்பட்ட முறையில் கடுமையான அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் சில யூஸர்களுக்காக, இந்த லாக்டவுன் அம்சமானது தீவிரமான, விரும்பி தேர்வு செய்யப்படக்கூடிய பாதுகாப்பு அம்சமாக இருக்கும்” என தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி துறையில் இருந்து கருத்துக்களையும் ஒத்துழைப்பையும் பெற தயாராக இருப்பதாக ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது. கணினியில் உள்ள குறைபாடுகளைக் கண்டறியும் நபர்களுக்கு பரிசுக்கள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது, அதிகபட்சமாக $2 மில்லியன் டாலர்கள் வரை வழங்கப்பட உள்ளது. இது தவிர, நிறுவனம் $10 மில்லியன் மானியத்தை “கூலிப்படை ஸ்பைவேரை உருவாக்கும் தனியார் நிறுவனங்கள், அதிக இலக்கு சைபர் தாக்குதல்களை விசாரிக்கும், அம்பலப்படுத்தும் மற்றும் தடுக்கும் நிறுவனங்களை ஆதரிப்பதற்காக” அறிமுகப்படுத்தியுள்ளது