ஊழியர்களை பணியமர்த்துவதை குறைக்க கூகுள் நிறுவனம் முடிவு

0
308

பொருளாதார மந்தநிலை உருவாகும் சூழல் இருப்பதால் நடப்பு ஆண்டு முழுவதும் ஊழியர்களை பணியமர்த்துவதை குறைக்க கூகுள் முடிவு செய்துள்ளது. இது குறித்து அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை ஊழியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். அதே நேரத்தில் மார்க்கெட்டிங் வணிகம் மற்றும் நிறுவனத்தின் முக்கிய லாபம் ஈட்டும் துறைகளுக்காக அந்த நிறுவனம் ஆயிரக்கணக்கான புதிய ஊழியர்களை சேர்த்துள்ளது. மேலும் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் பிற முக்கியப் பணிகளில் ஆட்களை பணியமர்த்துவதில் கூகுள் நிறுவனம் கவனம் செலுத்தும் என சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

Previous articleஇலங்கையில் அரசுக்கு எதிரான போராட்டம்… ஒருவர் உயிரிழப்பு
Next articleபொன்னியின் செல்வனுக்காக 5 மொழிகளில் டப்பிங் பேசி அசத்திய நடிகர் விக்ரம்