உக்ரைன் மீதான தாக்குதலை மீண்டும் தீவிரப்படுத்திய ரஷ்யா- 16 பேர் உயிரிழப்பு

0
178

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி 5 மாதத்தை நெருங்கினாலும் போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. ரஷ்யாவின் மும்முனை தாக்குதலுக்கு உக்ரைனின் பெரும்பாலான நகரங்கள் சின்னாபின்னமாகிவிட்டது. ஆனாலும் உக்ரைன் வீரர்கள் அசராமல் எதிர்த்துப் போரிட்டு வருவதால் இன்னும் சில நகரங்களைப் பிடிக்க முடியாமல் ரஷ்யா திணறி வருகிறது. உக்ரைன் மீதான தாக்குதலை மீண்டும் தீவிரப்படுத்தப்போவதாக ரஷ்ய அதிகாரிகள் அண்மையில் அறிவித்த நிலையில், அந்நாட்டின் மீது மும்முனை தாக்குதலை ரஷ்யா தொடுத்துள்ளது. உக்ரைனின் 2-வது பெரிய நகரமான கார்கிவ் மீதுதான் ரஷியா படைகள் குண்டு மழை பொழிந்து வருகின்றன.

ராக்கெட் தாக்குதலையும் நடத்தி வருகிறது. ரஷ்ய படைகளின் இந்த தாக்குதல்களில் பொதுமக்கள் 16 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைனிய அதிகாரிகள் தெரிவித்தனர். டோன்பாஸ் பிராந்தியத்தில் மக்கள் வசிக்கும் இடங்களில் உக்ரைன் படைகள் தாக்குதல் நடத்தும் சாத்தியம் இருப்பதால் அதை முறியடிக்கும் வகையில், உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த ரஷ்ய பாதுகாப்புத்துறை மந்திரி அறிவுறுத்தியிருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Previous article“சட்டத்தின் ஆட்சியை பாதுகாக்கவும்”- இலங்கைக்கான அமெரிக்க தூதர் வலியுறுத்தல்
Next articleஇலங்கையில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காண ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை