Newsஜனாதிபதியாகும் தீவிர முயற்சியில் அனுர பிரியதர்சன யாப்பா

ஜனாதிபதியாகும் தீவிர முயற்சியில் அனுர பிரியதர்சன யாப்பா

-

முன்னாள் மூத்த அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பாவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களை ஜூலை 20 ஆம் திகதி சமர்ப்பிக்க தீர்மானித்துள்ளதாக மிகவும் நம்பகத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன என்று சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கொழும்பில் இருந்து முன்னர் வெளிவந்த ‘சண்டே லீடர்’ வார ஏட்டின் குழுமத்துக்கு நெருக்கமான இணையத்தளமே இந்த செய்தியினை வெளியிட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தற்போதைய நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்கு நாட்டின் ஜனாதிபதியாக மிதவாதி ஒருவரை நியமிக்க வேண்டும் என்று பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் அபிப்பிராயம் இருப்பதாக அனுர பிரியதர்சன யாப்பா தலைமையிலான சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அநுர பிரியதர்சன யாப்பாவுக்கு ஆதரவளிக்க பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர்கள் மாத்திரமன்றி பெருமளவிலான சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குழுவும் ஏற்கனவே இணக்கம் தெரிவித்திருப்பதாக அந்த நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பில் அனுர பிரியதர்சன யாப்பாவிடம் கேட்ட போது, அரச தலைவர் தேர்தலில் போட்டியிடுமாறு பல நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும ஆகியோர் அரச தலைவர் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிந்திய தகவல்களின்படி ஜே.வி.பி. கட்சியின் அனுரகுமார திசநாயக்கவும் அரச தலைவர் தேர்தலில் போட்டடியிடவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Latest news

ஈஸ்டர் வார இறுதியில் பரபரப்பாக இருக்கும் விமான நிலையங்கள்

ஈஸ்டர் நீண்ட வார இறுதி காரணமாக ஆஸ்திரேலிய விமான நிலையங்கள் மிகவும் பரபரப்பாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் 9 முதல் 29 வரை சுமார்...

ஆஸ்திரேலியாவில் மிகவும் பிரபலமாக பயன்படுத்தப்படும் விலங்கு பெயர்கள்

ஆஸ்திரேலியாவில் மிகவும் பிரபலமான செல்லப் பெயராக கிரவுன் வாக்களிக்கப்பட்டுள்ளது. இது பூனைகள் மற்றும் நாய்கள் இரண்டிற்கும் பிரபலமான பெயராக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய செல்லப்பிராணி காப்பீட்டு நிறுவனமான...

காவல்துறையினருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் AFL வீரர்

ஆஸ்திரேலிய முன்னாள் கால்பந்து வீரர் ரிக்கி நிக்சன் தனது பேஸ்புக் கணக்கில் பதிவுகள் மூலம் காவல்துறையினரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை அவர் தனது...

மின்சார மிதிவண்டிகளை அதிகம் பயன்படுத்தும் குழந்தைகள் – உயரும் விபத்துக்கள்

ஆஸ்திரேலியாவில் மாற்றியமைக்கப்பட்ட மின்சார மிதிவண்டிகளைப் பயன்படுத்தும் குழந்தைகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது. இந்த மிதிவண்டியை மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் ஓட்ட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்து காவல்துறை...