இலங்கை போராட்டத்திற்கு நடுவே காதல் ஜோடியின் செயல் இணையத்தில் வைரல்

0
189

22 மில்லியன் மக்கள் தொகை கொண்ட இலங்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. உணவு, மருந்து, எரிபொருள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை வாங்க வழியில்லாமல் லட்சக்கணக்கான இலங்கை மக்கள் சிரமப்படுகின்றனர்.

நாட்டில் பல்வேறு பகுதிகளில் வன்முறை போராட்டங்கள் வெடித்துள்ளதால் பெரும் குழப்பம் நிலவுகிறது. கலவரங்கள் மற்றும் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் நாட்டின் நிதியை தவறாக கையாண்டதாக எதிர்க்கட்சியின் மற்றும் மக்களால் குற்றம்சாட்டப்பட்ட அந்நாட்டின் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சேஷ முதலில் மாலதீவுக்கும் பின் சிங்கப்பூருக்கும் தப்பி சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் நடைபெற்று வரும் வன்முறைப் போராட்டங்களால் அந்நாடு மட்டுமல்ல உலகமே சற்று அதிர்ந்து தான் போயுள்ளது. ஆட்சியாளர்கள் வேறு நாடுகளுக்கு பத்திரமாக தப்பி சென்று விடலாம் மக்களின் கொந்தளிப்பு அடங்குவதாயில்லை. பல்லாயிரக்கணக்கானோர் ஜனாதிபதி மற்றும் பிரதமர் இல்லங்கள் உட்பட மீண்டும் மீண்டும் அரசு கட்டிடங்களை முற்றுகையிட்டடு வருகின்றனர். நிலைமை இவ்வளவு கொந்தளிப்பாக இருக்க கிளர்ச்சியாளர்கள் கூட்டம் அலைகடலென திரண்டுளதற்கு மத்தியில் ஒரு ஜோடி செய்த செயல் தான் தற்போது ஹாட் டாபிக்காக சோஷியல் மீடியாக்களில் வைரலாகி கொண்டிருக்கிறது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க-வின் அலுவலகத்திற்கு வெளியே சமீபத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில் போராட்டத்தை கூட பொருட்படுத்தாமல் ஒரு ஜோடி உதட்டோடு உதடு சேர்த்து முத்தம் கொடுத்து கொண்டிருக்கின்றனர். இந்த போட்டோவை Newswire என்ற பத்திரிகை வெளியிட்டு உள்ளது.

“கப்பிள் கோல்ஸ்! கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகத்தை கைப்பற்றுவதற்கு வழிவகுத்த அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்ற பின்னர் ஒரு ஜோடி பாசத்தை வெளிப்படுத்தியது” என்று Newswire தனது ட்விட்டரில் இந்த போட்டோவை ஷேர் செய்துள்ளது. போராட்டக்காரர்களின் பெரும் கூட்டத்தின் பின்னணியில் ஒரு ஜோடி முத்தத்தை பகிர்ந்து கொள்ளும் காட்சி இடம்பெற்றுள்ள இந்த புகைப்படம் தான் தற்போது சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.