Newsஇலங்கையில் முட்டாள்கள் தேர்ந்தெடுத்த அறிவாளிகள்

இலங்கையில் முட்டாள்கள் தேர்ந்தெடுத்த அறிவாளிகள்

-

இலங்கையின் புதிய ஜனாதிபதியை நாளை தேர்ந்தெடுக்கிறார்கள்! அதற்கு முதல் இன்றைய இந்த அரசியல் பொருளாதார சமூக நெருக்கடி நிலைக்கு காரணமான பழைய ஆட்சிகளையும் ஒருமுறை அலசிவிட்டு வரலாம் என்ற அடிப்படையில் இந்த கட்டுரை எழுதப்படுகிறது!

1948 இல் இலங்கை சுதந்திரமடைந்தது முதல் கிட்டத்தட்ட 83% காலப்பகுதியை பண்டாரநாயக்க குடும்பம், சேனாநாயக்க குடும்பம், மகிந்ந ராஜபக்ச குடும்பம் ஆகியவை இலங்கை சுதந்திர கட்சி, ஐக்கிய தேசிய கட்சி, பொதுஜன பெரமுன ஆகிய பெயர்களில் ஆண்டுவந்திருக்கிறார்கள்!

இதுவரை இலங்கை அரசில் அங்கம் வகித்த முக்கிய அமைச்சர்கள் இந்த மூன்று கட்சிகளையும் சேர்ந்தவர்களாகவும் அல்லது இந்த மூன்று கட்சிக்குள்ளும் தாவித்திரிபவர்களாகவுமே இருந்திருக்கிறார்கள்!

இன்று மக்களும் நாடும் வந்திருக்கும் வங்குரோத்து நிலைக்கு இந்த மூன்று கட்சிகளின் பங்கும் இன்றியமையாதது என்பதை இணைப்பில் உள்ள சில தரவுளுடன் சற்று புரிய வைக்க முயல்கிறேன். மேற்படி தரவுகளை சமூகத்துக்கு தந்துதவிய பேராசிரியர்கள் சிசிர ஜெயசூரிய, சந்தன ஆகியோருக்கும் கலாநிதி குணதிலகவுக்கும் நன்றி! இதுவரை காலமும் சிங்கள பௌத்த தேசியவாதம் என்ற பெயரில் மொத்த அரசியலும் நடாத்தப்பட்டு வந்ததால் இவ்வளவு காலமும் ஆண்ட அல்லது மக்கள் தெரிந்துவிட்ட அரசியல்தலைமைகளின் அறிவற்ற அல்லது முட்டாள்த்தனமான பொருளாதார கோட்பாடுகளும் ஊழல்களும் பல சாதாரண மக்களுக்கு தெரியாமலே போய்விட்டது என்பது கசப்பான உண்மை.

1. 1965 முதல் நாங்கள் கிட்டத்தட்ட 16 தடவைகள் சர்வதேச நாணய நிதியத்திடம் பிச்சை எடுத்துள்ளோம்

(இணைப்பை பார்க்க)

2. 2004 வரை குறைந்த வட்டிக்கு கடன் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி போன்றவற்றில் கடன் பெற்றுவந்த இலங்கை அரசுகள் 2005 முதல்( மகிந்த அரசு 2005-2014, மைத்திரி-ரணில் நல்லாட்சி 2015-2019, கோத்தா-மகிந்த அரசு 2019-2022) ISB( International Servorgien bonds) மற்றும் வியாபார கடன்களை( commercial loans) அதிக வட்டிக்கு வாங்கி குவித்துள்ளன. தவிர வாங்கப்பட்ட கடன்களும் திட்டமிடப்பட்ட/ விரைவில் இலாபமீட்டக்கூடிய திட்டங்களில் முதலிடப்படாமல் அரசியல் சார் திட்டங்களுக்கும், இலகுவாக ஊழல் செய்யக்கூடிய திட்டங்களுக்கும் பயன்படுத்தப்பட்டதன் விளைவு இன்று கடன் கழுத்தை நெரித்து நொடித்துப்போனதாக அறிவித்து உலக அரங்கில் மொத்த நாட்டின் மானத்தையும் இந்த அரசுகள் வாங்கியுள்ளன.

(இணைப்பை பார்க்க)

3. இலங்கையின் தனியார் துறையே எப்போதும் நாட்டின் பொருளாதாரத்தை நேர்மறையாக வைத்திருக்க போராடிக்கொண்டிருக்க அரச துறைகள் தொடர்ச்சியாக நட்டத்திலேயை இயங்கி வந்துள்ளன. கடந்த கால அரசுகள் அரசியல் இருப்புக்காக அவற்றை இலாபகரமாக மாற்றவில்லை அல்லது மாற்ற முடியவில்லை. இதற்கு பல தொழிற்சங்கங்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் JVP. உம் முக்கிய காரணம். ஏதாவது கடினமான நடவடிக்கைகளில் அரசு இறங்கினால் தொழிற்சங்க நடவடிக்கை என்றபெயரில் தடுத்து அரச நிறுவனங்களை தொடர்ந்து நட்டத்தில் வைத்திருக்க பலகாலமாக உதவியிருக்கிறது. ஓட்டு அரசியலுக்காக அரசியல்வாதிகளும் தொடர்ந்து அரச நிறுவனங்களை நட்டத்தில் இயங்க அனுமதித்து ஊழலில் குளிர்காய்ந்து வந்ததன் விளைவை ஒட்டு மொத்த நாடும் இன்று அனுபவிக்கிறது.

( இணைப்பை பார்க்க)

இந்த நிலையில் நாளை புதிய ஜனாதிபதி தேர்வுக்கு வருவோம்.

ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து பிரிந்த சஜித் பிரேமதாசாவின் SJB அணி, இலங்கை சுதந்திரகட்சியில் இருந்து பிரிந்த பொதுஜன பெரமுனவின் டலஸ் தலைமையிலான அணியை ஆதரிக்கிறது. மறுபுறம் ஐக்கிய தேசிய கட்சி அணியை சுதந்திரகட்சியில் இருந்து பிரிந்த பொதுஜன பெரமுனவின் தினேஸ் குணவர்த்தன அணி ஆதரிக்கிறது.

இதில் யாரோ ஒருவர் வெல்லப்போகிறார். வென்ற அணிக்கு மீதமுள்ள சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் இணைந்து அமைச்சு பதவிகளை எடுப்பர்.

இந்த வீணாப்போன அரசியல்வாதிகளுக்காக பலகட்சிகள், பல கொள்கைகள் என்று பிரிந்து பிரிந்து கடந்த 74 வருசமாக வாக்களிக்கும் மக்களின் தலைவிதியை என்னவென்று சொல்வது???

இந்த அடிப்படையில் பௌத்த சிங்கள பேரினவாதமோ, மக்களோ பொருளாதார ரீதியாக ஒரு போதும் உருப்படப்போவதில்லை!

கடந்த வாரம் ஜனாதிபதி தகுதியுடையோர் பற்றிய அறிவியல் ஒப்பீடு ஒன்றை சிங்கள நண்பர் ஒருவர் செய்திருந்தார். இணைத்துள்ளேன். அதை பார்க்கும் போதே இவர்களின் பொருத்தப்பாடுகள் தெரியும். இவ்வாறான அறிவியல் அணுகுமுறைகள் எதிர்காலத்தில் ஒவ்வொரு பிரதிநிதியின் தெரிவிலும் வராதவரை நாடு உருப்படப்போவதில்லை!

அதனால் தான் தமிழ்தேசியம் பேசும் தமிழ்கட்சிகள் மற்றும் வடக்கு -கிழக்குமாகாண தமிழ் முஸ்லீம் சிறுபான்மை இனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் சுயாதீனமான பொருளாதாரக் கட்டமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என்பதை நீண்ட நாட்களாக கூறிவருகிறேன்.

நாட்டுக்குள் செய்யமுடியாவிட்டாலும் நாட்டுக்கு வெளியில் சுயாதீனமாக கட்டமைப்பை உருவாக்கி செய்யமுடியும். உள்நாட்டில் உற்பத்திப் பெருக்கத்திற்கான, வியாபார மற்றும் ஏற்றுமதி கட்டமைப்பை மட்டும் நடாத்திக்கொண்டு பணமூலத்திற்கான ஸ்திரமான கட்டமைப்பை வெளியே உருவாக்கலாம். உலகநாடுகளில் பல முஸ்லீம சமூகங்கள் அந்த அடிப்படையில் தான் இயங்குகின்றன. சேர்ந்து செய்ய முடியாவிட்டால் தனித்தனியாக செய்யலாம். பொருளாதார பலத்தை நாங்கள் நிரந்தரமாக கொண்டிருக்கும் வரை எண்ணிக்கையில் சிறுபான்மையான எந்த சமூகத்தையும் எந்த பேரினவாதத்தாலும் நசுக்கமுடியாது என்பதற்கு இஸ்ரேல் ஒரு நல்ல உதாரணம்!

ஆனால் போர்முடிந்து 13 வருடங்கள் ஆகியும் உள்ளூரில் ஒரு பொருளாதாரக்கட்டமைப்பையும் ஒற்றுமையாக உருவாக்க வக்கில்லாத தமிழ்தேசிய கட்சிகளுக்கும் தெற்கின் பௌத்த சிங்கள பேரினவாத கட்சிகளின் அரசியலுக்கும் பெரிய வேறுபாடுகள் ஒன்றுமில்லை!

தான்தோன்றியதாக உருவாகும் மக்கள் போராட்டங்களும் இறுதியில் ஏதோ ஒரு அரசியலால் சூறையாடப்படும்!

ஏனெனில் மக்களை தொடர்ந்து முட்டாள்களாகவே வைத்திருப்பதில் மட்டும் பல அரசியல்வாதிகள் தொடர்ச்சியாக வென்றுவிடுகின்றனர்!

இனியாவது விழித்துக்கொள்ளுங்கள்! இல்லையேல் நாளையை தலைமுறையின் விதிகளும் வீதிகளிள் எழுதப்படும்!

முட்டாள்கள் தேர்ந்தெடுக்கும் அறிவாளிகள், அறிவாளிகளானால் அது தற்செயலானது

நன்றி

திருநாவுக்கரசு தயந்தன்

Latest news

ஆஸ்திரேலியா முழுவதும் பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் பற்றி எச்சரிக்கை

சமீபத்திய தரவுகளின்படி, கடந்த பத்தாண்டுகளில் ஆஸ்திரேலியாவில் syphilis மற்றும் gonorrhea நோயாளிகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. NSW பல்கலைக்கழகத்தில் உள்ள கிர்பி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி,...

ஆசியாவின் 7 பலவீனமான விமானப்படைகளில் இடம்பிடித்துள்ள இலங்கை

சீனா, ரஷ்யா, இந்தியா போன்ற நாடுகள் தங்கள் சக்திவாய்ந்த விமானப்படைகளுக்காக இந்த நாட்களில் அதிகம் பேசப்படும் நாடுகளாகும். அதன்படி, 2025 The Global Firepower (GFP) Index...

ஒக்டோபர் 11 முதல் அதிகரிக்கப்படும் மற்றொரு சேவைக்கான கட்டணம்

ஆஸ்திரேலியாவில் streaming சேவை விலைகள் மீண்டும் அதிகரிக்கும் என்று Apple அறிவித்துள்ளது. அதன்படி, ஒக்டோபர் 11 ஆம் திகதி முதல், மாதாந்திர கட்டணம் $12.99 இலிருந்து $15.99...

மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்களுக்கு அத்தியாவசிய நிவாரணம் வழங்கும் Centrelink

Centrelink சலுகைகளைப் பெறும் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் எதிர்காலத்தில் மிகவும் தேவையான நிவாரணத்தைப் பெற உள்ளனர். சனிக்கிழமை முதல் வயது ஓய்வூதியங்கள், பராமரிப்பு கொடுப்பனவுகள் மற்றும் ஊனமுற்றோர்...

ஆஸ்திரேலியாவில் iPhone 17 Pre-order செய்வது எப்படி?

சமீபத்தில் Apple நான்கு புதிய தொலைபேசி மாடல்களை அறிமுகப்படுத்தியது. அவை iPhone 17, iPhone 17 Air, iPhone 17 Pro மற்றும் iPhone 17...

இனி எலும்பு முறிவை 3 நிமிடத்தில் சரி செய்யலாம் – சீன விஞ்ஞானிகளின் அதிசயக் கண்டுபிடிப்பு

சீனாவின் Zhejiang பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ‘Bone-02’ எனும் புதிய பசையை உருவாக்கி மருத்துவத்துறையில் சாதனை படைத்துள்ளனர். தற்போது எலும்பு முறிவு ஏற்பட்டால், முழுமையாக குணமடைய சில மாதங்கள்...