Newsஆஸ்திரேலியா அமைச்சருடன் முக்கிய ஆலோசனை நடத்திய கமல் - காரணம் வெளியானது

ஆஸ்திரேலியா அமைச்சருடன் முக்கிய ஆலோசனை நடத்திய கமல் – காரணம் வெளியானது

-

உலகநாயகன் கமல்ஹாசன் ஆஸ்திரேலிய அமைச்சருடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றது.
இந்த நிலையில் அவர் எதற்காக ஆஸ்திரேலிய அமைச்சரை சந்தித்தார் என்பது குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது.

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி உலகம் முழுவதும் 400 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து உள்ளது.

குறிப்பாக ஆஸ்திரேலியாவில் இந்த படம் மிகப்பெரிய சாதனை செய்து உள்ளது என்பதும் ரஜினியின் ‘2.0’ படத்தை அடுத்து ஆஸ்திரேலியாவில் அதிக வசூல் செய்த தமிழ் படம் ’விக்ரம்’ தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கமல்ஹாசனின் அடுத்த படத்தை பிரபல மலையாள இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்க உள்ள நிலையில் இந்த படத்தின் சில பகுதி படப்பிடிப்பு ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து ஆஸ்திரேலியாவில் படப்பிடிப்பு நடத்த அனுமதி பெற ஆஸ்திரேலியா அமைச்சரை கமல் சந்தித்ததாகவும் கமலஹாசனுக்கு ஆஸ்திரேலியாவில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் ஆஸ்திரேலியாவில் தனது KH நிறுவனத்தின் கதர் தயாரிப்பு ஆடைகளை விற்பனை செய்வது குறித்தும் அவர் ஆஸ்திரேலிய அமைச்சரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

Latest news

ஆஸ்திரேலியாவில் மலிவு விலையில் வீடுகள் காணப்படும் பகுதிகள்

வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு புதிய வீடு வாங்குபவர்களுக்கு ஆஸ்திரேலியாவின் மிகக் குறைந்த விலையில் உள்ள புறநகர்ப் பகுதிகளை ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. சிட்னி, பிரிஸ்பேன்,...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் உயர்ம் பியர் விலை

அவுஸ்திரேலியாவில் பியர் மீதான வரி அடுத்த வாரம் மீண்டும் அதிகரிக்கப்படுவதால் பியர் விலை உயரும் என ஊகங்கள் வெளியாகியுள்ளன. இந்த வரி அதிகரிப்பு நிதிப் பிரச்சினைகளை எதிர்நோக்கும்...

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் கறுப்புச் சந்தையாக உள்ள ரஷ்யா!

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரியிலிருந்து இன்று வரையில் போர் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ரஷிய படைகளால் சிறைபிடிக்கப்பட்ட உக்ரைன் போர்க் கைதிகளின் உடல்கள்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

ஒலிம்பிக் சரித்திரம் படைத்த ஆஸ்திரேலியாவின் ரக்பி அணி

இந்த வருட ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஏழு பேர் கொண்ட ரக்பி போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இன்று காலை பாரிஸில் நடைபெற்ற ஆட்டத்தில்...