Newsநீர்த்தாரை தாக்குதலுக்கு பயன்படுத்திய நீருக்காண கட்டணத்தை செலுத்தாத காவல்துறை

நீர்த்தாரை தாக்குதலுக்கு பயன்படுத்திய நீருக்காண கட்டணத்தை செலுத்தாத காவல்துறை

-

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கொழும்பில் நடைபெற்ற மக்கள் போராட்டத்தின் போது போராட்டக்காரர்களை கலைக்க பயன்படுத்திய நீருக்காக நீர் வழங்கல் சபைக்கு செலுத்த வேண்டிய தொகையை சிறிலங்கா காவல்துறை இதுவரை செலுத்தவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

போராட்டத்தின் போது காவல்துறையினர் அதிக அளவு தண்ணீரைப் பயன்படுத்தியதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் வெளிப்படுத்தியதாக ஆங்கில நாளேடு ஒன்று தெரிவித்துள்ளது.

நீர் பீரங்கிகளை இயக்குவதற்கு பயன்படுத்தப்பட்ட தண்ணீருக்கான பணத்தை காவல்துறை திணைக்களம் இதுவரை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபைக்கு செலுத்தவில்லை என்று காவல்துறை அதிகாரி மேலும் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதேவேளை, வெளி மாகாணங்களில் உள்ள காவல்துறை நிலையங்களில் இருந்து கண்ணீர் புகைக் குண்டுகளை கொழும்புக்கு கொண்டு வருவதற்கு காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இடம்பெற்ற போராட்டங்களின் போது பெருமளவிலான கண்ணீர் புகைக் குண்டு பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதால் கொழும்பு காவல்துறை நிலையங்களில் குறைந்த அளவே கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Latest news

சீன BYDகளால் நிரம்பியுள்ள ஆஸ்திரேலிய கிடங்குகள்

ஆஸ்திரேலியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பிரபலமான சீன மின்சார காரான BYD வாகனங்கள், விற்பனை இல்லாததால் கிடங்குகளில் விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தால் வழங்கப்படவுள்ள புதிய வாகனத் திறன் தரநிலை...

இரண்டு வருடங்களில் வீட்டு விலைகள் வேகமாக உயரக் காரணம் இதுதான்!

அரசாங்கத்தின் முதல் வீடு வாங்கும் வைப்பு உத்தரவாதத் திட்டத்தின் காரணமாக, ஆஸ்திரேலியா முழுவதும் வீட்டு விலைகள் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேகமாக உயர்ந்துள்ளதாக புதிய...

ஆஸ்திரேலியர்களுக்கு 3 மணி நேரம் இலவச மின்சாரம்

புதிய எரிசக்தி திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் இலவச சூரிய சக்தி மின்சாரம் வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. “Solar Sharer” என்று...

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கும் “கல்மேகி”

தென்கிழக்கு ஆசியாவில் வீசும் "Kalmaegi" என்ற வெப்பமண்டல சூறாவளி குறித்து ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயல் வியட்நாம், கம்போடியா...