சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா; புதிதாக 1,012 பேருக்கு பாதிப்பு உறுதி

0
300

உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்படுத்தி விட்டது. கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படையாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருகின்றன. இந்த நிலையில் சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இருப்பினும் கடந்த 2 மாதங்களாக அங்கு தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்துக்கும் குறைவாக பதிவாகி வந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டி பதிவாகியுள்ளது.

அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் சீனாவின் உள்ளூர் நகரங்களில் 1,012 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 862 பேருக்கு அறிகுறி இல்லாத கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு கொரோனாவால் புதிதாக உயிரிழப்புகள் ஏற்படவில்லை. சீனாவில் இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,226 ஆக உள்ளது. மேலும் சீனாவில் இதுவரை உறுதி செய்யப்பட்ட கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 2,27,980 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous articleதண்ணீர் குடிப்பதால் இரத்த அழுத்தம் குறையுமா..? ஒரு நாளைக்கு எவ்வளவு குடிக்க வேண்டும்..?
Next articleஇனி அலுவலகத்திலேயே குட்டி தூக்கம் போடலாம்… ஜப்பான் நிறுவனம் அசத்தல் கண்டுபிடிப்பு