தண்ணீர் குடிப்பதால் இரத்த அழுத்தம் குறையுமா..? ஒரு நாளைக்கு எவ்வளவு குடிக்க வேண்டும்..?

0
436

உங்கள் இரத்த நாளங்கள் வழியாக பாயும் இரத்தத்தின் வேகம் அதிகமாக இருப்பதையே உயர் இரத்த அழுத்தம் என்று கூறுகின்றனர். இதன் விளைவாக இதய நோய்கள் உட்பட பல உடல்நலப் பிரச்சனைகள் உண்டாகலாம். தண்ணீர் குடிப்பதால் உங்கள் இரத்த அழுத்தத்தின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். நமது உடலில் நீரேட்டத்தின் அளவு சீராக இருக்கும்போது, ​​​​உடல் முழுவதும் இரத்தத்தை செலுத்துவதில் இதயத்தின் செயல்திறன் அதிகமாக இருக்கும். எனவே அதிகளவு நீர் அருந்துவது உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்காது, மாறாக பல நன்மைகளை மட்டுமே உண்டாக்கும் எனவும் ஆய்வுகள் தெரிவிக்கிறது.

அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் (AHA) படி, உயர் இரத்த அழுத்தத்தைத் தவிர்ப்பதற்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறை மிக அவசியமான ஒன்று என கூறியுள்ளது. மேலும் குறைவான அளவு உப்பு, மதுவை அருந்துதலை கட்டுப்படுத்துதல், வழக்கமான உடற்பயிற்சிகளை மேற்க்கொள்வது, மன அழுத்தத்தை கட்டுப்படுத்துதல், உடல் எடையைப் பராமரித்தல், புகைபிடிப்பதை நிறுத்துவது மற்றும் ஆரோக்கியமான உணவை உண்ணுதல் போன்றவற்றை பின்பற்றுமாறும் சுகாதார அமைப்பு பரிந்துரைக்கிறது. நிறைய தண்ணீர் குடிப்பது உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் என்றும் நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆனால் இரத்த அழுத்தத்தை குறைக்க ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்? என்ற கேள்வி நம்மில் எல்லோரிடமும் தோன்றுவதுதான்…

மருத்துவர்கள் மற்றும் MD, Monika Wassermann ஒவ்வொரு நாளும் நாம் எட்டு பாட்டில் (240ml) தண்ணீர் குடிக்க பரிந்துரைக்கிறார்கள். இதைபற்றி ஊட்டச்சத்து நிபுணர் கூறுகையில், தினமும் எட்டு கிளாஸ் தண்ணீர் குடிப்பது நம் அனைவருக்கும் நல்லது என்றும், இதை ஆரோக்கியமான உடல் செயல்பாட்டிற்காக தான் பரிந்துரைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளது. ஏன் என்பதை விளக்கும் வகையில்,உயர் இரத்த அழுத்தத்தின் அபாயத்தை அதிகரிக்கும் அதிகப்படியான சோடியம் உட்பட அனைத்து நச்சுகள் மற்றும் கழிவுகளை இரத்தத்திலிருந்து நீக்குவதற்கு நீர் உதவுகிறது என்றும் அவர் கூறுகிறார். உலகளவில் 30-79 வயதானவர்களில் 1.28 பில்லியன் மக்கள் உயர் இரத்த அழுத்தத்தைக் கொண்டுள்ளனர் என உலக சுகாதார அமைப்பு (WHO) கூறுகிறது.

இருப்பினும், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களில் 46% மக்கள் தங்களுக்கு இந்த உயர் இரத்த அழுத்தம் இருப்பதை அறிந்திருக்கவில்லை. ஏனெனில் உயர் இரத்த அழுத்தம் அறிகுறிகளுடன் வர கூடிய நோய் அல்ல. இந்த நோயின் தீவிரம் அதிகமாகும் போது அல்லது ஆபத்தான நிலைக்கு முன்னேறும் போதுதான், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற தீவிர இருதய நோய்களை அறிகுறிகளாக காட்டத் தொடங்கும். இதுவே உயர் இரத்த அழுத்தத்தை silent killer என்று அழைப்பதற்கு காரணம்.

Previous articleநிலவுக்கும் செவ்வாய்க்கும் புல்லட் ரயில்விடும் ஜப்பான்
Next articleசீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா; புதிதாக 1,012 பேருக்கு பாதிப்பு உறுதி