Newsஇணைய மோசடிகளை தடுக்க சிங்கப்பூரும் ஆஸ்திரேலியாவும் இணக்கம்

இணைய மோசடிகளை தடுக்க சிங்கப்பூரும் ஆஸ்திரேலியாவும் இணக்கம்

-

சிங்கப்பூரும் ஆஸ்திரேலியாவும் இணைய மோசடிகளுக்கு எதிரான ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் தொடர்பில் இணக்கக் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

சிங்கப்பூரின் தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையமும் ஆஸ்திரேலிய தொடர்பு, ஊடக ஆணையமும் அதில் கையெழுத்திட்டதாக அவை வெளியிட்ட கூட்டறிக்கை குறிப்பிட்டது.

இணக்கக் ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் –

  • தகவல்களைப் பகிர்ந்துகொள்வது,
  • மோசடிகள், போலி அழைப்புகள், குறுந்தகவல் சேவைகள் தொடர்பான புலன்விசாரணைகளில் உதவுதல்
  • இவற்றின் தொடர்பில் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை இணைந்து கண்டறிவது

போலித் தொலைபேசி அழைப்புகளும் மின்னியல் தகவல்களும் அனைத்துலகப் பிரச்சினையாக இருப்பது கூட்டறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது.

உலகளாவிய நிலையில் ஒருங்கிணைந்த முறையில் அத்தகைய பிரச்சினைகளுக்கான தீர்வுகளைக் கண்டறிவதன் முக்கியத்துவத்தைச் சிங்கப்பூரும் ஆஸ்திரேலியாவும் புரிந்துகொண்டு செயல்பட முனைகின்றன. அதற்கு இணக்க ஒப்பந்தம் கைகொடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

Latest news

மேற்கு ஆஸ்திரேலியாவில் குழந்தை பராமரிப்பு மையத்திற்கு தீ வைத்த நபர்

மேற்கு ஆஸ்திரேலிய குழந்தை பராமரிப்பு மையம் தீப்பிடித்து எரிந்ததில், $500,000 மதிப்புள்ள சேதம் ஏற்பட்டதை அடுத்து, ஒருவர் மீது தீ வைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நேற்று மாலை...

சுகாதார நிதி பிரச்சினை குறித்து விவாதிக்க கூடும் மாநில அரசுகள்

பொது மருத்துவமனை நிதி ஒப்பந்தம் தொடர்பாக மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு இப்போது தனது பொறுப்புகளைக் குறைத்து, அரசு...

Black Friday தள்ளுபடிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்!

Black Friday விற்பனையுடன் வரும் போலி ஒப்பந்தங்கள் மற்றும் ஏமாற்றும் விளம்பரங்கள் குறித்து ஆஸ்திரேலிய போட்டி மற்றும் நுகர்வோர் ஆணையம் ஆஸ்திரேலியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. தவறாக வழிநடத்தும்...

ஆஸ்திரேலியாவை நெருங்கி வரும் புயல்

ஆஸ்திரேலிய கடற்கரையில் கரையைக் கடக்கவிருக்கும் வெப்பமண்டல சூறாவளி Fina, 2 ஆம் வகை புயலாக வேகமாக வலுப்பெற்று வருவதாக வானிலை அறிக்கைகள் எச்சரிக்கின்றன. இது இன்றிரவு 2...