News கோட்டா நல்லவர்; ரணில் கெட்டவர்: கண்டு பிடித்த பிரபலம்

கோட்டா நல்லவர்; ரணில் கெட்டவர்: கண்டு பிடித்த பிரபலம்

-

போராட்டக்காரர்களை அடக்கும் திறன் இருந்தும் கோட்டாபய ராஜபக்ச அவ்வாறு செய்யவில்லை என்றும் ஆனால், ரணில் பதவியேற்று 24 மணி நேரத்தில் தனது கைவரிசையை காட்டி விட்டார் என்று சிறிலங்கா இராமஞான மகா நிகாயத்தின் பிரதம சங்கநாயக்க கலாநிதி ஓமல்பே சோபித தேரர் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக ஊடகங்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை கருத்து தெரிவிக்கும் போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

காலி முகத்திடல் செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல் வெறுக்கத்தக்கது மற்றும் கொடூரமானது. இது வன்மையாகக் கண்டிக்கப்படுகின்றது. இவ்வாறு போராட்டத்தை கட்டுப்படுத்தும் திறன் கோட்டாபய ராஜபக்சவுக்கும் இருந்தது. ஆனால், அவர் அவ்வாறு செய்யவில்லை.

புதிய அரச தலைவர் பதவிப்பிரமாணம் செய்து 24 மணித்தியாலங்களுக்கு மேலாகிவிட்டது. ஆனால், இதுவரை சரியான அனைத்துலக சமூகத்தின் அங்கீகாரம் கிடைக்கவில்லை.

மக்கள் போராட்டங்களை ஆயுத பலத்தால் ஒடுக்குவதற்கு இடமளிக்க வேண்டாம் என்று அண்மையில் அனைத்துலக சமூகம் அரசுக்கு அறிவித்திருந்ததுடன் எச்சரிக்கையும் விடுத்திருந்தது.

இவ்வாறான நிலையில், ஆயுதம் ஏந்தாமல் ஜனநாயகக் கோரிக்கைகளை முன்வைக்கும் செயற்பாட்டாளர்கள் மீது நள்ளிரவில் ஆயுதப் படைகள் பயங்கரவாதக் குழுவின் பாணியில் தாக்குதல் நடத்தியது வெட்கக்கேடானது.

கோட்டாபய ராஜபக்ச அவர்களுக்கும் இவ்வாறே மக்கள் போராட்டத்தை அடக்கும் திறமை இருந்தது. ஆனால், அவர் அவ்வாறு செய்யவில்லை. கோட்டாபய ராஜபக்சவை விட புதிய அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்க கடுமையான தீர்மானம் எடுப்பவர் என்பதை நாடு புரிந்துகொண்டுள்ளது என்றார் அவர்.

Latest news

மூன்று நாட்டு தூதரக கட்டங்களை கைவிட்ட சிறிலங்கா!

அவுஸ்திரேலியா, சுவீடன் மற்றும் கென்யா ஆகிய நாடுகளில் சிறிலங்காவின் தூதரகங்களாக இயங்கி வந்த கட்டடங்கள் சிறந்த முறையில் பயன்படுத்தப்படவில்லை என்று கணக்காய்வு அறிக்கையில்...

 உயிருக்கு ஆபத்தான நிலையில் கரை ஒதுங்கிய இராட்சத திமிங்கலம்.

அமெரிக்காவின் நியூயோர்க் மாகாணத்தில் ஹெம்ப்ஸ்டெட் நகரில் உள்ள லிடோ கடற்கரையில்  ஹம்ப்பேக்  இனத்தைச் சேர்ந்த இராட்சத திமிங்கலம் ஒன்று அண்மையில்  கரையொதுங்கியுள்ளது.

மெல்போர்னில் உள்ள இந்தியர்களிடையே கருத்து வேறுபாடு அதிகரிப்பு!

மெல்போர்ன் உட்பட விக்டோரியா மாகாணத்தில் இந்திய சமூகத்தினரிடையே நிலவும் மோதல்களை உடனடியாக நிறுத்துமாறு மத அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

தெற்கு ஆஸ்திரேலியாவில் தன்னார்வ கருணைக்கொலைகள்!

தீராத நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கருணைக்கொலை சட்டம் தெற்கு ஆஸ்திரேலியாவிலும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், இந்த ஆண்டு விதிமுறைகளை அமல்படுத்தும்...

வீழ்ச்சியடையும் அபாயத்தில் NSWவிலுள்ள சிறு வணிகங்கள்!

மாநிலத்தின் முக்கிய வணிக சங்கமான பிசினஸ் NSW கருத்துப்படி, நியூ சவுத் வேல்ஸில் சுமார் 1/4 சிறு வணிகங்கள் வீழ்ச்சியடையும் அபாயத்தில் உள்ளன....

ஆஸ்திரேலியாவில் இன்று முதல் உயரும் எரிவாயு கட்டணங்கள் – நெருக்கடியில் விக்டோரிய மக்கள்!

ஆஸ்திரேலியாவில் உள்ள பல எரிவாயு நிறுவனங்கள் இன்று முதல் தங்கள் கட்டணத்தை உயர்த்தியுள்ளன. அதன்படி, எரிவாயு கட்டணம்...