News புதிய அமைச்சரவை நியமனம் - முழுமையான விபரம்

புதிய அமைச்சரவை நியமனம் – முழுமையான விபரம்

-

இலங்கை அரசாங்கத்தின் புதிய அமைச்சரவையின் பதவிப் பிரமாணம் தற்போது இடம்பெற்று வருகிறது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்று வருகிறது.

முன்னதாக இலங்கையின் 27 ஆவது பிரதமராக தினேஸ் குணவர்தன இன்று காலை பதவியேற்றிருந்தார்.

இந்த நிலையில் புதிய அமைச்சரவை அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் மேற்கொண்டுள்ளனர். அத்துடன், அமைச்சரவை அமைச்சர்கள் கூட்டு உறுதிமொழியை சற்றுமுன் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய,

  • பிரதமர் தினேஸ் குணவர்தன உள்நாட்டு அலுவல்கள், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சராகவும்,
  • டக்ளஸ் தேவானந்தா கடற்றொழில் அமைச்சராகவும்,
  • சுசில் பிரேமஜயந்த கல்வி அமைச்சராகவும்,
  • பந்துல குணவர்தன ஊடக, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சராகவும்,
  • கெஹெலிய ரம்புக்வெல்ல – சுகாதார மற்றும் நீர்ப்பாசன அமைச்சராகவும்,
  • மஹிந்த அமரவீர விவசாய மற்றும் வனவள, வனப்பாதுகாப்பு அமைச்சராகவும்,
  • விஜயதாச ராஜபக்ஸ நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சராகவும்,
  • ஹரீன் பெர்ணான்டோ காணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராகவும்,
  • ரமேஷ் பத்திரண பெருந்தோட்ட மற்றும் கைத்தொழில் அமைச்சராகவும்,
  • பிரசன்ன ரணதுங்க நகர அபிவிருத்தி அமைச்சராகவும்,
  • அலி சப்ரி வெளிவிவகார அமைச்சராகவும்,
  • விதுர விக்ரமநாயக்க புத்தசாசன மற்றும் சமய கலாசார அலுவல்கள் அமைச்சராகவும்,
  • கஞ்சன விஜேசேகர வலுசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சராகவும்,
  • நஸீர் அஹமட் சுற்றாடல் அமைச்சராகவும்,
  • ரொஷான் ரணசிங்க விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சராகவும்,
  • மனுஷ நாணயக்கார தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சராகவும்,
  • டிரான் அலஸ் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராகவும்,
  • நலின் பெர்ணான்டோ வர்த்தக வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சராகவும்,பதவியேற்றுக் கொண்டுள்ளனர்

Latest news

மேலும் 9 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்தது அமேசான் நிறுவனம்

கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு ஏற்பட்டுள்ள பொருளாதார சூழல் காரணமாக டுவிட்டர், மெட்டா நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களின் ஊழியர்களில் பெரும்பாலானவர்களை கடந்த ஆண்டு...

உலகில் மிக மகிழ்ச்சியாக வாழும் மக்கள்!

உலகின் மகிழ்ச்சியான மக்கள் வாழும் நாடாக பின்லாந்து தெரிவாகியுள்ளது. இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தை டென்மார்க்கும், மூன்றாவது இடத்தை...

கரடியை கட்டிப்பிடிக்கும் வேலைக்கு ஆட்கள் தேவை

அமெரிக்காவில், “கருப்பு கரடியை கட்டிப்பிடித்து பராமரிக்க ஆட்கள் தேவை” என, வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நியு...

491 விசாவிற்கான விண்ணப்பிக்க மெல்போர்ன் பெருநகரப் பகுதிக்கு வாய்ப்பு

Skilled Work Regional (subclass 491) விசா நியமனத்திற்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பு மெல்போர்ன் பெருநகரப் பகுதியில் வசிப்பவர்களுக்கும் கிடைக்கிறது.

குயின்ஸ்லாந்து வீட்டு வாடகைக்கான அதிகபட்ச மதிப்பை நிர்ணயிக்க தீர்மானம்

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் நிலவும் வீட்டு வாடகை பிரச்சனையை தீர்க்கும் வகையில் வீட்டு வாடகைக்கு அதிகபட்ச மதிப்பை நிர்ணயிப்பதில் மாநில அரசு கவனம் செலுத்தியுள்ளது.

உலகெங்கிலும் உள்ள Ferrari உரிமையாளர்களின் வங்கிக் கணக்கு விவரங்கள் வெளிப்படும் அபாயம்

உலகப் புகழ்பெற்ற கார் நிறுவனமான Ferrariயின் அதிகாரப்பூர்வ இணையதளம் சைபர் தாக்குதலால் தாக்கப்பட்டுள்ளது. தாக்கிய தரப்பினரும் கப்பம் கேட்டுள்ளதாக...