நடிகர் ரன்வீர் சிங் மீது, மும்பை போலீசார் வழக்குப்பதிவு

0
308

நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்ட பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மீது, மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரன்வீர் சிங். இவர் தான் எடுத்துக்கொள்ளும் வித்தியாசமான புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிடுவது வழக்கம்.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு ரன்வீர் சிங், தமது நிர்வாண புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்களிடம் வரவேற்பு இருந்த அதே சமயம் சலசலப்பை ஏற்படுத்தியது.இந்தநிலையில் நிர்வாண புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய நடிகர் ரன்வீர் சிங் மீது மும்பை காவல் நிலையத்தில் மும்பையை சேர்ந்த வழக்கறிஞர் வேதிகா சவுபே செம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரில், “நடிகர் ரன்வீர் சிங் தனது நிர்வாண புகைப்படங்கள் மூலம் பெண்களின் உணர்வுகளை புண்படுத்தி உள்ளார். அவர்களின் கண்ணியத்தை அவமதித்துள்ளார்.எனவே அவர் மீது இந்திய தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்” என கூறப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில் ரன்வீர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.