Whatsapp-ன் புதிய வசதி… பயனாளர்களின் பிரச்னைகளுக்கான மிகப் பெரிய தீர்வு

0
303

அண்மையில் வாட்ஸ்அப் (whatsapp) அறிமுகப்படுத்திய மறைந்து போகும் மெசேஜ்கள் (disappearing messages) ஆப்ஷன் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. காரணம் வேறு வழி இன்றி பல குழுக்களில் இணைந்திருப்பவர்கள் அந்த குழுவில் வரும் மெசேஜை அளிப்பதையே வாரத்தில் ஒரு நாள் வேலையாக வைத்திருந்தனர். தற்போது டிஸ்அப்பியரிங் செய்யும் மெசேஜ்களை சேமிக்கும் வசதியை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தப்போகிறது. இதுபோன்ற தேவையில்லாத வேலைகளுக்கு இந்த ஆப்ஷன் விடுதலை கொடுத்தது. ஃபோனில் ஸ்டோரேஜ் நிரம்புவதைக் குறைக்க இந்த வசதியை பெரும்பாலான வாட்சப் யூஸர்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இதில் இருக்கும் சிக்கல் என்னவென்றால், நீங்கள் ஒரு முறை டிஸ்அப்பியரிங் மெசேஜஸ் ஆப்ஷனை ஆன் செய்து விட்டால் மறுபடியும் அதை ஆஃப் செய்யும் வரை குரூப்பிலோ அல்லது தனிப்பட்ட சேட்டிலோ(chat ) உங்களுக்கு வந்த மெசேஜை கண்டிப்பாகத் திரும்பவும் பார்க்க முடியாது. இதனால் அவதிப்பட்ட பலர் இது குறித்து வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு தங்கள் கருத்துக்களை அனுப்பி வைத்தனர்.

இதன் விளைவாகவே வாட்ஸ்அப் புதிதாக ஒரு அம்சத்தை அறிமுகம் செய்யப் போவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. யூஸர்கள் காலாவதியான, தங்கள் அரட்டைகளிலிருந்து மறைந்த பின்னரும் கூட, மெசேஜ்களை சேமித்து வைக்கும் புதிய வசதியைச் செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக வாட்ஸ்அப் புதிய “கெப்ட் மெசேஜஸ்” பிரிவைக் கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது, இது யூஸர் வைத்திருக்க விரும்பும் அனைத்து டிஸ்அப்பியரிங் மெசேஜ்களையும் சேமிக்கும். வாட்ஸ்அப் டிராக்கரான WABetaInfo இன் அறிக்கையின்படி, டிஸ்அப்பியரிங் மெசேஜ்கள், குரூப் சேட்டில் உள்ள அனைவரும் அணுகக்கூடிய வகையில் கேப்ட் மெசேஜ்ஜஸ் (Kept messages) என்ற புதிய பிரிவில் சேமிக்கப்படும்.

தற்போது, ​​ சாட் களில் மறைந்து வரும் செய்திகளைச் சேமிக்க வழி இல்லை, மேலும் யூஸர்கள் டிஸ்அப்பியரிங் சேட்டில் உள்ள மெசேஜ்களை starred option ஆக ( வாட்ஸ் அப் மேலே தெரியும் நட்சத்திரக்குறி) கூட சேமித்து வைக்க முடியாது. இருப்பினும், கேப்ட் மெசேஜ்ஜஸ் அம்சம் இதை மாற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது மற்றும் யூஸர்கள் ஒரு மெசேஜை சேமித்து வைக்கலாம், இது அர்ச்சிவ்ஸ் (archives) அல்லது புக் மார்க் (bookmarks) போன்றகேப்ட் மெசேஜ்ஜஸ்க்கு செல்லும். கூடுதலாக குரூப் அட்மின்கள் இந்த அம்சத்தைக் குறிப்பிட்ட வரம்பிற்கு உட்பட்டே பயன்படுத்த வாட்ஸ் அப் அனுமதிக்கும், அதாவது குரூப் அட்மின்கள் டிஸ்அப்பியரிங் மெசேஜை தக்கவைக்கும் வசதியை (privacy setting) மாற்றுவதற்கு புதிய தனியுரிமை அமைப்பு இருக்கும்.இந்த அம்சம் இன்னும் மேம்பாட்டில் உள்ளது என்றும் பீட்டா சோதனையாளர்கள் கூட இதுவரை அம்சத்தை அணுகவில்லை என்றும் அறிக்கை குறிப்பிடுகிறது. இந்த அம்சம் உருவாக்கத்தில் உள்ளது, எனவே இது பீட்டா சோதனையாளர்களுக்கு எப்போது வெளியிடப்படும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

Previous articleவிண்வெளியில் இனி இணைந்து பணியாற்ற மாட்டோம்! ரஷ்யாவின் திடீர் அறிவிப்பு
Next articleநடிகர் ரன்வீர் சிங் மீது, மும்பை போலீசார் வழக்குப்பதிவு