Newsஅவசரகால சட்டம் 57 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது!

அவசரகால சட்டம் 57 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது!

-

பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் பதில் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட அவசரகால நிலைமைப் பிரகடனம் தொடர்பான தீர்மானம் இன்று (27) பாராளுமன்றத்தில் 57 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

இதற்கு ஆதரவாக 120 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன், எதிராக 63 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

இன்று மு.ப 10.00 மணிக்கு பாராளுமன்றம் கூடியதுடன், சபை முதல்வர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களினால் பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் பதில் ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட அவசரகால நிலைமைப் பிரகடனம் தொடர்பான தீர்மானம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதம் ஆரம்பிக்கப்பட்டது.

பி.ப 5.20 மணி வரை இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதுடன், விவாதம் முடிவடைந்ததும் எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்லவினால் வாக்கெடுப்புக் கோரப்பட்டமைக்கு அமைய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ்17ஆம் திகதியன்று செய்யப்பட்ட பிரகடனத்தின் மூலம் மேற்படி கட்டளைச்சட்டத்தின் IIஆம் பகுதியின் கீழ் இலங்கை முழுவதும் 18ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வருவதாக அப்போதைய பதில் ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

Latest news

கிரேன் சரிந்து விழுந்ததில் 90 பேர் இடம்பெயர்வு

பலத்த காற்று காரணமாக கோல்ட் கோஸ்ட்டில் உள்ள சவுத்போர்ட்டில் உள்ள ஒரு கேரவன் பூங்காவில் 30 டன் எடையுள்ள கிரேன் சரிந்து விழுந்ததில் 90க்கும் மேற்பட்டோர்...

குயின்ஸ்லாந்தில் அதிகரித்துள்ள வெள்ள அபாயம்

குயின்ஸ்லாந்தின் பல பகுதிகளில் கடுமையான இடியுடன் கூடிய மழை மற்றும் பரவலான வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வடக்கு பிராந்தியத்தின் ஈரமான...

20 ஆண்டுகளுக்கு முன்பு 3 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்த ஆஸ்திரேலியப் பெண்

இதயம், நுரையீரல் மற்றும் சிறுநீரகம் ஆகியவற்றை உள்ளடக்கிய அரிய மற்றும் சிக்கலான மூன்று உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட ஆஸ்திரேலியாவின் முதல் பெண் லூசிண்டா...

கிறிஸ்துமஸ் பண்டிகைகளின் போது செல்லப்பிராணிகளை பாதிக்கும் மனச்சோர்வு

கிறிஸ்துமஸ் காலத்தில் செல்லப்பிராணிகளுக்கு ஏற்படும் மறைக்கப்பட்ட ஆபத்துகள் குறித்து ஆஸ்திரேலிய கால்நடை மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். வீடுகளில் வசிக்கும் செல்லப்பிராணிகள் அதிக சத்தம், தெரியாத விருந்தினர்களின் வருகை, பட்டாசு...

20 ஆண்டுகளுக்கு முன்பு 3 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்த ஆஸ்திரேலியப் பெண்

இதயம், நுரையீரல் மற்றும் சிறுநீரகம் ஆகியவற்றை உள்ளடக்கிய அரிய மற்றும் சிக்கலான மூன்று உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட ஆஸ்திரேலியாவின் முதல் பெண் லூசிண்டா...