அடுத்த படத்திற்கு தயாராக அமெரிக்கா பறக்கும் கமல்…என்ன படம்?

0
349

லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு அடுத்த படத்திற்கான வேலையில் உள்ளார் கமல்ஹாசன்.நீண்ட காலமாக கிடப்பில் இருக்கும் இந்தியன் 2 படத்திற்கு தயாராவதற்கு தான் அமெரிக்கா செல்ல உள்ளார். இந்தியன் 2 ல் வயதான கெட்அப் சரியாக பொருந்த வேண்டும் என்பதற்காக தான் கமல் ஹாலிவுட்டின் டாப் மேக்அப் கலைஞர்களை சந்திக்க உள்ளார்.

கமலின் மேக்அப் சரியாக அமையவில்லை என்று தான் இந்தியன் 2 படம் தாமதமானது. இந்த முறையும் அது போல் தவறு நடக்காமல் இருக்கத்தான் கமல் இப்போதே இந்தியன் 2 படத்திற்காக தயாராக சென்று விட்டதாக சொல்லப்படுகிறது.அமெரிக்காவில் கமல் 3 வாரங்கள் தங்க போவதாகவும், அதற்கு பிறகு இந்தியா திரும்பும் அவர் செப்டம்பர் மாதத்தில் இந்தியன் 2 ஷுட்டிங்கை துவங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனால் இந்தியன் 2 படத்தை முடித்த பிறகு தான் கமல், மகேஷ் நாராயணன் படத்திற்கு தயாராவார் என சொல்லப்படுகிறது.

Previous articleஆஸ்திரேலியாவில் 32 ஆண்டுகளில் இல்லாத அளவு பாதிப்பு – தீவிரமடையும் அபாயம்
Next articleபிலிப்பைன்சை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்: 5 பேர் பலி