ஆஸ்திரேலிய வரலாற்றில் 30 வருடங்களின் பின்னர் அதிகூடிய சதவீதத்தினால் பியர் விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பியரின் விலை ஏறக்குறைய 04 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதுடன், ஒரு லீற்றர் 2.50 டொலரால் அதிகரிக்கப்படவுள்ளது.
அதற்கமைய, ஒரு பைண்ட் சுமார் 15 டொலர்கள் வரை உயரும் என்று கூறப்படுகிறது.
பியருக்கு உலகில் அதிக வரி விதிக்கப்படும் நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா கருதப்படுகிறது.
எவ்வாறாயினும், இந்த வரி அதிகரிப்புக்கு முகங்கொடுத்து தமது தொழிலை பராமரிப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக மதுபானசாலை உரிமையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.