ஆஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமாக பிரவேசித்து சிக்கும் சட்டவிரோதக் குடியேற்றவாசிகளை சட்ட விரோதமாக தடுத்து வைப்பதை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பிரேரணையை பெடரல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் ஆன்ட்ரூ வில்கி இந்த பிரேரணையை தாக்கல் செய்ய உள்ளார்.
இதனிடையே, சட்டவிரோதமாக குடியேறியவர்களை தடுப்பு மையங்களில் அடைத்து வைக்கும் ஆஸ்திரேலியாவின் கொள்கையை உடனடியாக மாற்ற வேண்டும் என சிட்னி பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
தடுப்பு முகாம்களில் மன அழுத்தம், மனச்சோர்வு போன்ற பல உடல்நலப் பிரச்சினைகள் எழுவதாக தெரியவந்துள்ளது.
சுமார் 05 வருடங்களாக ஆஸ்திரேலியா முழுவதும் உள்ள குடிவரவு தடுப்பு முகாம்கள் தொடர்பான தகவல்களைப் பயன்படுத்தி இந்த ஆய்வு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
முகாம்களில் இருக்கும் புலம்பெயர்ந்தவர்களின் உறவினர்கள் அல்லது நெருங்கிய நண்பர்களுக்கு அவர்களின் நலம் பற்றி விசாரிக்க அதிக வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்பது அதன் பரிந்துரைகளில் ஒன்றாகும்.