Newsஜோசப் ஸ்டாலின் கைது - இன்று நீதிமன்றத்தில் ஆஜர்! கவலையில் ஐநா

ஜோசப் ஸ்டாலின் கைது – இன்று நீதிமன்றத்தில் ஆஜர்! கவலையில் ஐநா

-

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைதுசெய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட இலங்கை ஆசிரியர் சேவை தொழிற்சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இன்று (04) கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

மே 28ஆம் திகதி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட குற்றச்சாட்டின் பேரில் ஜோசப் ஸ்டாலின் நேற்று (03) பிற்பகல் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட ஜோசப் ஸ்டாலின் தற்போது கோட்டை பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு வருவதாக சட்டத்தரணி ஜயந்த தெஹியத்தகே தெரிவித்தார்.

அவர் கைது செய்யப்பட்டமை குறித்து மனித உரிமை பாதுகாவலர்கள் குறித்த ஐநாவின் விசேட அறிக்கையாளர் மேரி லோவ்லெர் கவலை வெளியிட்டுள்ளார்.

மனித உரிமை பாதுகாவலர் ஜோசப் ஸ்டாலின் மாலை ஆறுமணிக்கு கைதுசெய்யப்பட்டுள்ளார் என்ற கவலை தரும் செய்தியை இலங்கையிலிருந்து கேள்விப்படுகின்றேன்.

ஜோசப்ஸ்டாலின் போன்ற மனித உரிமை செயற்பாட்டாளர்களின் செயற்பாடுகள் முன்னர் எப்போதையும் விட சமீபவாரங்களில் மிக முக்கியமானவையாக காணப்படுகின்றன,அவற்றிற்கு ஆதரவளிக்கவேண்டும் – தண்டிக்ககூடாது என அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

Latest news

ஆஸ்திரேலியாவில் மலிவு விலையில் வீடுகள் காணப்படும் பகுதிகள்

வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு புதிய வீடு வாங்குபவர்களுக்கு ஆஸ்திரேலியாவின் மிகக் குறைந்த விலையில் உள்ள புறநகர்ப் பகுதிகளை ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. சிட்னி, பிரிஸ்பேன்,...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் உயர்ம் பியர் விலை

அவுஸ்திரேலியாவில் பியர் மீதான வரி அடுத்த வாரம் மீண்டும் அதிகரிக்கப்படுவதால் பியர் விலை உயரும் என ஊகங்கள் வெளியாகியுள்ளன. இந்த வரி அதிகரிப்பு நிதிப் பிரச்சினைகளை எதிர்நோக்கும்...

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் கறுப்புச் சந்தையாக உள்ள ரஷ்யா!

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரியிலிருந்து இன்று வரையில் போர் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ரஷிய படைகளால் சிறைபிடிக்கப்பட்ட உக்ரைன் போர்க் கைதிகளின் உடல்கள்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

ஒலிம்பிக் சரித்திரம் படைத்த ஆஸ்திரேலியாவின் ரக்பி அணி

இந்த வருட ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஏழு பேர் கொண்ட ரக்பி போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இன்று காலை பாரிஸில் நடைபெற்ற ஆட்டத்தில்...