பல வருடங்களாக ஆஸ்திரேலியாவில் பெரும் துயர்ங்களை அனுபவித்த இலங்கை தமிழ் குடும்பத்திற்கு ஆஸ்திரேலியாவில் வாழ்வதற்கான நிரந்தர வதிவிட விசா வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு வந்த படகு மூலம் நடேசன் முருகப்பன் மற்றும் பிரியா நடேஸன் குடும்பம் தங்கள் போராட்டத்தில் இன்று வெற்றி பெற்றுள்ளனர்.
தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றதை அடுத்து, குவீன்ஸ்லாந்து மாநிலத்தில் தாங்கள் வாழ்ந்து வந்த இடத்துக்குத் திரும்பலாம் என்ற நம்பிக்கை அவர்களுக்குப் பிறந்திருந்த நிலையில் இன்று நிறந்தரமாக ஆஸ்திரேலியாவில் வாழ அவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
நான்கு குடும்ப உறுப்பினர்களுக்கும் இன்று நிரந்தர வதிவிட விசா வழங்கப்பட்டுள்ளதாக குடிவரவு அமைச்சர் ஆண்ட்ரூ கில்ஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஏறக்குறைய 04 வருடங்களாக தடுப்புக்காவலில் உள்ளவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக கடந்த கூட்டாட்சி தேர்தலின் போது தொழிற்கட்சி உறுதியளித்தது.
அதன்படி, அண்மையில் அவர்களுக்கு தற்காலிக விசா வழங்கப்பட்டு, பிரதமர் அந்தோனி அல்பானீஸ் அவர்களை பிலோலாவில் சந்தித்திருந்தார்.
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது ஆஸ்திரேலியாவிற்கு தப்பி வந்த இந்த பெற்றோர் ஆஸ்திரேலியாவில் திருமணம் செய்து இரண்டு பெண் பிள்ளைகளை பெற்றுள்ளனர்.
கடந்த வருடம், இளைய மகள் சுகயீனம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவர்களது விசாக்கள் தொடர்பாக நீதிமன்ற நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.