Breaking Newsஆஸ்திரேலியாவில் பல வருடங்கள் போராடிய இலங்கை தமிழ் குடும்பத்திற்கு நிரந்தர வதிவிட...

ஆஸ்திரேலியாவில் பல வருடங்கள் போராடிய இலங்கை தமிழ் குடும்பத்திற்கு நிரந்தர வதிவிட விசா

-

பல வருடங்களாக ஆஸ்திரேலியாவில் பெரும் துயர்ங்களை அனுபவித்த இலங்கை தமிழ் குடும்பத்திற்கு ஆஸ்திரேலியாவில் வாழ்வதற்கான நிரந்தர வதிவிட விசா வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு வந்த படகு மூலம் நடேசன் முருகப்பன் மற்றும் பிரியா நடேஸன் குடும்பம் தங்கள் போராட்டத்தில் இன்று வெற்றி பெற்றுள்ளனர்.

தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றதை அடுத்து, குவீன்ஸ்லாந்து மாநிலத்தில் தாங்கள் வாழ்ந்து வந்த இடத்துக்குத் திரும்பலாம் என்ற நம்பிக்கை அவர்களுக்குப் பிறந்திருந்த நிலையில் இன்று நிறந்தரமாக ஆஸ்திரேலியாவில் வாழ அவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

நான்கு குடும்ப உறுப்பினர்களுக்கும் இன்று நிரந்தர வதிவிட விசா வழங்கப்பட்டுள்ளதாக குடிவரவு அமைச்சர் ஆண்ட்ரூ கில்ஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஏறக்குறைய 04 வருடங்களாக தடுப்புக்காவலில் உள்ளவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக கடந்த கூட்டாட்சி தேர்தலின் போது தொழிற்கட்சி உறுதியளித்தது.

அதன்படி, அண்மையில் அவர்களுக்கு தற்காலிக விசா வழங்கப்பட்டு, பிரதமர் அந்தோனி அல்பானீஸ் அவர்களை பிலோலாவில் சந்தித்திருந்தார்.

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது ஆஸ்திரேலியாவிற்கு தப்பி வந்த இந்த பெற்றோர் ஆஸ்திரேலியாவில் திருமணம் செய்து இரண்டு பெண் பிள்ளைகளை பெற்றுள்ளனர்.

கடந்த வருடம், இளைய மகள் சுகயீனம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, ​​அவர்களது விசாக்கள் தொடர்பாக நீதிமன்ற நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Latest news

63,000 கார்களை திரும்பப் பெறும் BMW

ஏர்பேக் அமைப்பில் குறைபாடு கண்டறியப்பட்டதை அடுத்து, 60,000க்கும் மேற்பட்ட பிஎம்டபிள்யூ கார்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. ஆஸ்திரேலிய உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள எச்சரிக்கையின்படி, பல BMW...

இத்தாலிக்குச் செல்லும் ஆஸ்திரேலியர்களுக்கு $3000 அபராதம்

இத்தாலியில் உள்ள ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் தங்கள் கடவுச்சீட்டை எப்போதும் தங்களிடம் வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இத்தாலிக்கு விஜயம் செய்யும் போது வெளிநாட்டு கடவுச்சீட்டை பயண இடங்களுக்கு எடுத்துச்...

மேற்கு ஆஸ்திரேலியாவில் தொடங்கும் State Nomination Migration

மேற்கு ஆஸ்திரேலியாவில் புதிய நிதியாண்டிற்கான State Nomination Migration திட்டம் (SNMP) இப்போது தொடங்கியுள்ளது. மேற்கத்திய அவுஸ்திரேலிய அரசாங்கம் இந்த திட்ட வருடத்திற்கான விண்ணப்பக் கட்டணமாக $200...

விதிகளை மீறி கேமராவில் பதிவாகிய 30,000 பேர்

தெற்கு ஆஸ்திரேலியாவின் புதிய கேமரா அமைப்பில் ஒரு மாதத்திற்குள் சுமார் 31,000 வாகன ஓட்டிகள் வாகனம் ஓட்டும்போது தங்கள் தொலைபேசிகளைப் பயன்படுத்துகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் டோரன்ஸ்வில்லி,...

விதிகளை மீறி கேமராவில் பதிவாகிய 30,000 பேர்

தெற்கு ஆஸ்திரேலியாவின் புதிய கேமரா அமைப்பில் ஒரு மாதத்திற்குள் சுமார் 31,000 வாகன ஓட்டிகள் வாகனம் ஓட்டும்போது தங்கள் தொலைபேசிகளைப் பயன்படுத்துகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் டோரன்ஸ்வில்லி,...

குயின்ஸ்லாந்து மக்களுக்கு ஒரு மோசடி அழைப்பு பற்றி அறிவிப்பு

குயின்ஸ்லாந்து காவல்துறை, காவல்துறை அதிகாரிகளாகக் காட்டிக் கொள்ளும் அடையாளத் திருட்டுக் குழுக்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது. மோசடி செய்பவர்கள் நம்பகமான அல்லது நன்கு அறியப்பட்ட...