Breaking News ஆஸ்திரேலியாவை அதிர வைத்த துப்பாக்கிச்சூடு - மூன்று பேர் பரிதாபமாக உயிரிழப்பு

ஆஸ்திரேலியாவை அதிர வைத்த துப்பாக்கிச்சூடு – மூன்று பேர் பரிதாபமாக உயிரிழப்பு

-

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணம், போகியில் உளள கால்நடைகள் பண்ணை மீது நேற்று காலையில் பயங்கர துப்பாக்கிச்சூடு நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் குண்டு பாய்ந்து, உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தில் மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொலிஸார் அங்கு விரைந்து சென்று துப்பாக்கிச்சூட்டில் அடிவயிற்றில் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்தவரை மீட்டு, அவசர அறுவை சிகிச்சைக்காக ஹெலிகாப்டர் மூலம் மக்கே நகரில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்கள், அவரது உறவினர்கள் என தெரிய வந்துள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்திய நபர், மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி விட்டார்.

அவரை தேடும் வேட்டையை பொலிஸார் முடுக்கி விட்டுள்ளனர்.. இந்த துப்பாக்கிச்சூட்டின் பின்னணி என்ன என்பது உடனடியாக தெரியவரவில்லை. இந்த துப்பாக்கிச் சூட்டால் ஆஸ்திரேலியா அதிர்ந்து போய் இருக்கிறது.

ஏனென்றால் உலகிலேயே கடுமையான துப்பாக்கிச்சட்டங்கள் இருந்தும், இப்படியொரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது. இதுபற்றி பொலிஸ் தலைமை அதிகாரி கருத்து தெரிவிக்கையில் இது மிகவும் அரிதான ஒரு சம்பவம் என தெரிவித்தார்.

Latest news

அர்ஜெண்டினாவில் நிலநடுக்கம்

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான அர்ஜெண்டினாவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கம் அந்நாட்டின் வடமேற்குப் பகுதியில் சான் அண்டோனியோ...

சிரியாவில் சர்வதேச விமான நிலையம் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

சிரியாவில் ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாத குழுக்கள் இருப்பதாக கூறி அந்த நாட்டின் மீது இஸ்ரேல் தொடர்ந்து, வான்தாக்குதல் நடத்தி வருகின்றது.

டான்டினோங் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு புயல் அபாயம்

மெல்போர்ன் நகரின் பல இடங்களில் இன்று புயல் தாக்கும் அபாயம் உள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. டான்டினோங்-ஜீலாங்-மெல்போர்ன் பெருநகரப்...

தெற்கு ஆஸ்திரேலியா முதியோர் பராமரிப்பு தொலைதூர பராமரிப்பை விரிவுபடுத்த நடவடிக்கை

தெற்கு ஆஸ்திரேலிய மாநில அரசாங்கம் வயதான பராமரிப்பு குடியிருப்பாளர்களுக்கு தொலைதூர சிகிச்சை (மெய்நிகர் பராமரிப்பு) வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளது.