News தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எதிராக முலாவது தேங்காயை உடைத்த ரணில்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எதிராக முலாவது தேங்காயை உடைத்த ரணில்

-

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அவருடைய பாணியிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைக்கின்ற முதலாவது தேங்காயை உடைத்து இருக்கின்றாரென இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் வடமாகாண சபையின் அவைத் தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) பத்தாவது தேசிய மாநாட்டில் உரையாற்றும்போதே சீ.வீ.கே.சிவஞானம் இதனை தெரிவித்தார்.
” தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனக்கு வாக்களித்ததாக ரணில் விக்கிரமசிங்க கூறுகின்றார். பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் சந்தேகக் கண்ணுடன் ஒருவரை ஒருவர் பார்க்கின்ற விடயத்தை கெட்டித்தனமாக ரணில் விக்கிரமசிங்க செய்திருக்கின்றார். அந்தளவிற்கு தமிழ்க் கூட்டமைப்பு தலைவர்கள் சோரம் போகமாட்டார்கள் என்ற நம்பிக்கை மக்களுக்கு இருக்கின்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தவரையில் மூன்று கட்சிகளும் எல்லோரையும் இணைத்துக் கொண்டு செயல்பட வேண்டும். அதனுடைய ஒற்றுமை நீடிக்க வேண்டும்.எல்லோரையும் அணைத்து செல்லக்கூடிய சுபாவம் கொண்ட சித்தார்த்தன் இந்த முயற்சியை தொடர்வார்.

என்னைப் பொறுத்தவரையில் தமிழரசு கட்சியின் உப கட்சியினுடைய நிகழ்வே இது. இங்கு அங்கம் வகிப்பவர்கள் அனைவரும் தமிழரசுக் கட்சியில் இருந்து வந்தவர்களே. தற்போது அது உடைந்து இருந்தாலும் கூட அடிப்படையில் தமிழரசு என்ற ஒற்றுமை இருக்கின்றது.” – எனவும் அவர் குறிப்பிட்டார்.

Latest news

தளபதி 68-வது படம் குறித்து வெளியான முக்கிய தகவல்

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. விஜய்க்கு 68-வது படமான இப்படத்தில் நடிக்கும் கதாநாயகி மற்றும் இதர நடிகர், நடிகைகள்...

15 ஆண்டுகளில் மிகக் குறைவாக பதிவாகியுள்ள வீட்டு சேமிப்பு

இந்த ஆண்டின் முதல் காலாண்டில் ஆஸ்திரேலியாவின் பொருளாதாரம் 0.2 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. புள்ளிவிபரப் பணியகம் இன்று வெளியிட்டுள்ள...

விக்டோரியாவில் வசிப்பவர்களுக்கு கனமழை மற்றும் பலத்த காற்று எச்சரிக்கை

கனமழை மற்றும் பலத்த காற்று குறித்து விக்டோரியா மாநில மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சில சமயங்களில்...

நீண்ட வார இறுதியில் எரிபொருள் விலை பற்றிய எச்சரிக்கை

கடந்த இரண்டு வாரங்களில் ஆஸ்திரேலியாவின் அனைத்து முக்கிய நகரங்களிலும் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. நீண்ட வார இறுதியில் வரவுள்ள...

விக்டோரியாவில் வசிப்பவர்களுக்கு கனமழை மற்றும் பலத்த காற்று எச்சரிக்கை

கனமழை மற்றும் பலத்த காற்று குறித்து விக்டோரியா மாநில மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சில சமயங்களில்...

நீண்ட வார இறுதியில் எரிபொருள் விலை பற்றிய எச்சரிக்கை

கடந்த இரண்டு வாரங்களில் ஆஸ்திரேலியாவின் அனைத்து முக்கிய நகரங்களிலும் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. நீண்ட வார இறுதியில் வரவுள்ள...