Breaking Newsஆஸ்திரேலியாவில் பிள்ளைகள் - இலங்கையில் தாய்க்கு நேர்ந்த கதி

ஆஸ்திரேலியாவில் பிள்ளைகள் – இலங்கையில் தாய்க்கு நேர்ந்த கதி

-

ஆஸ்திரேலியாவில் பிள்ளைகள் வாழ்ந்து வரும் நிலையில் இலங்கையில் அவர்களது தாயார் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கண்டி, லேக் சுற்றுவட்ட பகுதியில் உள்ள மிகப்பெரிய வீடொன்றில் தனியாக வசித்து வந்த 65 வயதுடைய கோடீஸ்வரப் பெண்ணொருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இக்கொலை நேற்று பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அரசாங்கத்தில் நிறைவேற்று தர பணியில் இருந்து ஓய்வு பெற்ற பெண் வீட்டில் தனியாக வசித்தார். அவரது பெரிய வீட்டின் அருகே ஏராளமான கடைகளை வாடகைக்கு வழங்கி வந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த பெண்ணின் கணவர் சில காலங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளதாகவும் அவர்களது இரண்டு பிள்ளைகள் ஆஸ்திரேலியாவில் வசித்து வருவதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

நேற்று மதியம் 2 மணியளவில் குறித்த பெண் வசித்த வீட்டில் இருந்து சுமார் ஐந்தடி உயரமுள்ள கறுப்பான நபர் ஒருவர் கத்தியுடன் வெளியில் வருவதைப் பார்த்ததாகவும், அவரது கை அறுபட்டு இரத்தம் கசிந்ததனையும் அவதானித்ததாக பெயர் குறிப்பிட விரும்பாத நேரில் பார்த்த சாட்சி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

அந்த நபர் தன்னை கத்தியைக் காட்டி மிரட்டியதால் அவர் அருகில் செல்லவில்லை எனவும் பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது குறித்த பெண் இரத்த வெள்ளத்தில் துடித்துக்கொண்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் சற்று நேரத்தில் அவர் உயிரிழந்துவிட்டமையினால் அவரை மருத்துவமனையில் அனுமதிக்காமல் பொலிஸாரிடம் தகவல் வழங்கியதாக குறித்த நபர் தெரிவித்துள்ளார்.

சொத்துப் பிரச்சினை காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை பல கட்டங்களாக மேற்கொண்டு வருகின்றனர்

Latest news

ஆஸ்திரேலியாவில் வீட்டு விலைகள் அதிகரித்துள்ள விதம்!

வட்டி விகிதக் குறைப்புகளால், ஆஸ்திரேலியாவில் வீட்டு விலைகள் நாளுக்கு நாள் உயர்ந்து வருகின்றன. PropTrack இன் சமீபத்திய தரவுகளின்படி, இந்த ஆண்டு இதுவரை வேகமாக விலை வளர்ச்சியைக்...

வாகனங்களில் நாய்களை ஏற்றிச் செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதைத் தவிர்க்க ஆலோசனை.

செல்ல நாய்கள் காரில் எங்கு கொண்டு செல்லப்படுகின்றன என்பதைப் பொறுத்து அபராதம் விதிக்கப்படும் என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல ஆஸ்திரேலியர்கள் தங்கள் செல்ல நாயை காரில் ஏற்றிக்கொண்டு...

மூன்று பேரின் DNA-வில் இருந்து பிறந்த நோயற்ற குழந்தைகள்

உலகில் முதல்முறையாக, மூன்று பேரின் DNAவைப் பயன்படுத்தி எட்டு குழந்தைகள் பிறந்துள்ளன. இந்த பரிசோதனையை ஐக்கிய இராச்சியத்தில் உள்ள மருத்துவர்கள் நவீன மருத்துவ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடத்தியதாக...

கம்போடியாவில் இணையக் குற்றங்களில் ஈடுபட்ட 1,000 பேர் கைது

கம்போடியாவில் இணைய மோசடி செயல்களை மேற்கொள்ளும் நிலையங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் 1,000க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கம்போடிய பொலிஸார் கடந்த 16ம் திகதி இத்தகவலை வெளியிட்டுள்ளனர். இணைய...