Newsஅரசாங்கத்துடன் இணைவது தொடர்பான முடிவை அறிவித்த சஜித்!

அரசாங்கத்துடன் இணைவது தொடர்பான முடிவை அறிவித்த சஜித்!

-

அரச செலவீணங்களை குறைக்கும் வகையில் தாம் அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொள்ள மாட்டோம் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் சுமார் 70இற்கும் அதிகமானோரை நியமிக்க அரசாங்கம் ஆலோசித்து வருகின்றது. அதற்கு சர்வகட்சி அரசாங்கம் எனவும் பெயரிட்டுள்ளனர். அவ்வாறானதொரு சர்வகட்சி அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர், நாட்டிலுள்ள பொதுமக்களின் அபிலாசைகள் இல்லாதொழிக்கப்படும்.

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி ஆகிய நாம் அரசாங்கத்தின் சிறந்த வேலைத்திட்டங்களுக்கு ஆதரவு வழங்குவோம். பிழையான செயற்பாடுகளுக்கு நாம் எதிர்ப்பு வெளியிடுவதுடன் அந்த பிரச்சினையை தீர்க்க யோசனைகளை முன்வைப்போம். நாடு வீழ்ந்துள்ள நிலையிலிருந்து நாட்டை கட்டியெழுப்ப நாம் எதிரணியிலிருந்து செயற்படுவோம். இதனால் செலவினம் குறைவடையும் என்பதுடன் அந்த தொகையினை எமது தாய்மார்களுக்கான போசனை வேலைத்திட்டங்களுக்காகவும் பாடசாலை மாணவர்களுக்கான பகலுணவு வேலைத்திட்டத்திற்கு ஒதுக்கிட வேண்டும்.மாணவர்களின் கல்வி மற்றும் டிஜிட்டல் எண்ணக்கருவின் ஊடாக நாட்டின் 4 பாகங்களிலும், பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அந்த நிதிகளை ஒதுக்க வேண்டும்.

அமைச்சரவை அமைச்சுப் பதவியை பெற்றுக்கொள்வதைவிட இதனை செய்வது மேலாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

Latest news

ஆஸ்திரேலியாவில் மலிவு விலையில் வீடுகள் காணப்படும் பகுதிகள்

வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு புதிய வீடு வாங்குபவர்களுக்கு ஆஸ்திரேலியாவின் மிகக் குறைந்த விலையில் உள்ள புறநகர்ப் பகுதிகளை ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. சிட்னி, பிரிஸ்பேன்,...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் உயர்ம் பியர் விலை

அவுஸ்திரேலியாவில் பியர் மீதான வரி அடுத்த வாரம் மீண்டும் அதிகரிக்கப்படுவதால் பியர் விலை உயரும் என ஊகங்கள் வெளியாகியுள்ளன. இந்த வரி அதிகரிப்பு நிதிப் பிரச்சினைகளை எதிர்நோக்கும்...

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் கறுப்புச் சந்தையாக உள்ள ரஷ்யா!

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரியிலிருந்து இன்று வரையில் போர் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ரஷிய படைகளால் சிறைபிடிக்கப்பட்ட உக்ரைன் போர்க் கைதிகளின் உடல்கள்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

ஒலிம்பிக் சரித்திரம் படைத்த ஆஸ்திரேலியாவின் ரக்பி அணி

இந்த வருட ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஏழு பேர் கொண்ட ரக்பி போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இன்று காலை பாரிஸில் நடைபெற்ற ஆட்டத்தில்...