News சிட்னி ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற 60,000க்கும் மேற்பட்ட மக்கள்

சிட்னி ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற 60,000க்கும் மேற்பட்ட மக்கள்

-

ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தின் தலைநகர் சிட்னியில் பெரிய அளவில் சாலை ஓட்டப்பந்தயம் இடம்பெற்றுள்ளது.

அதில் 60,000க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். City2Surf எனும் நிகழ்ச்சியில் உலகின் ஆகப்பெரிய கேளிக்கை ஓட்டப்பந்தயம் இடம்பெற்றது.

ஆஸ்திரேலியாவின் ஆகப்பெரிய நகரான சிட்னியின் ஹைட் பார்க் முதல் போண்டி பீச் (Hyde Park, Bondi Beach) வரையிலான சாலை ஓட்டப் பாதையின் நீளம் 14 கிலோமீட்டர்.

டைனசார், கொரில்லா, நட்சத்திரங்கள் எனப் பல்வேறு மாறுவேடங்களிட்டவண்ணம் பங்கேற்பாளர்கள் பந்தயத்தில் கலந்துகொண்டனர்.

கடந்த ஈராண்டாகக் கோவிட் நோய்ப்பரவலால் நேரடியாக ஓட்டப்பந்தயம் நடைபெறவில்லை. இருப்பினும் மெய்நிகர் வழியாக City2Surf ஓட்டப்பந்தயங்கள் நடத்தப்பட்டன.

1971ஆம் ஆண்டில் முதன்முதலில் நடைபெற்ற City2Surf நிகழ்ச்சி ஆஸ்திரேலியாவின் தொண்டு நிறுவனங்கள் பலவற்றுக்கு மில்லியன்கணக்கான டொலர் நிதியைத் திரட்டுகிறது.

Latest news

சிட்னி அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பெண் சடலமாக மீட்பு – விசாரணைகள் ஆரம்பம்

மேற்கு சிட்னி அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பெண்ணின் சடலத்தை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு காரணம் குடும்ப தகராறு என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விக்டோரியா அரசு ஊழியர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு இரட்டிப்பு

விக்டோரியாவில் பொதுத்துறை ஊழியர்களுக்கான வருடாந்திர ஊதிய உயர்வு இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது வருடத்திற்கு 1.5 வீத சம்பள அதிகரிப்புக்கு...

YouTube-இல் அதிரடி மாற்றம்! இனி இந்த வசதியை பயன்படுத்த முடியாது

யூடியூபில் ஸ்டோரீஸ் என்ற வசதி நீக்கப்பட உள்ளதாக, கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.கூகுள் நிறுவனத்தில் பிரபலமான செயலியாக அறியப்பட்டும் யூடியூப்பில், ஸ்டோரீஸ் என்ற வசதி...

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இலங்கையர் என்ற பெருமையை பெற்ற ஈழத் தமிழர்

இலங்கையில் பிறந்து இங்கிலாந்தில் புலம்பெயர்ந்து வாழும் 46 வயதான விவேகானந்தன் துஷியந்தன் , முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் நினைவேந்தலை 8849 மீற்றர் உயரமான...

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இலங்கையர் என்ற பெருமையை பெற்ற ஈழத் தமிழர்

இலங்கையில் பிறந்து இங்கிலாந்தில் புலம்பெயர்ந்து வாழும் 46 வயதான விவேகானந்தன் துஷியந்தன் , முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் நினைவேந்தலை 8849 மீற்றர் உயரமான...

பெர்த் மருத்துவர்களுக்கு ChatGPT தடை

AI அல்லது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு பெர்த் நகரத்தில் உள்ள மருத்துவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நோயாளிகளின் தனிப்பட்ட...