News ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்த சர்ச்சைக்குரிய சீன கப்பல்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்த சர்ச்சைக்குரிய சீன கப்பல்

-

பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய சீன இராணுவத்தின் கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி கப்பலான, யுவான் வாங் 5 இன்று காலை 7.50 அளவில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இந்தக் கப்பல் கடந்த 11 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடையவிருந்தது எனினும், தேசிய பாதுகாப்பை காரணம் காட்டி இந்தியா கடுமையான கவலைகளை எழுப்பியிருந்த நிலையில் அதன் வருகை தாமதமானது.

இந்த விவகாரம் குறித்து மேலும் ஆலோசனைகள் நடத்தப்படும் வரை பயணத்தை ஒத்திவைக்குமாறு இலங்கை சீனாவிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

எவ்வாறாயினும், குறித்த கப்பல் சீனாவிலிருந்து, பயணத்தை ஆரம்பித்து 24 நாட்களின் பின்னரே, அதாவது இலங்கையை வந்தடைவதற்கு மூன்று நாட்கள் இருந்த நிலையில் கடந்த 8 ஆம் திகதியே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டதாக தெதரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், கடந்த 11 ஆம் திகதி வரவிருந்த குறித்த கப்பலின் வருகை தாமதமானது. எவ்வாறாயினும், குறித்த கப்பல் ஹம்பாந்தோட்டைக்கு வருவதற்கு இலங்கையின் வெளிவிவகார அமைச்சு கடந்த 13 ஆம் திகதி அனுமதி வழங்கியது.

தேவையான எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக குறித்த கப்பல் நாட்டிற்கு பிரவேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில், இன்றைய தினம் நாட்டை வந்துள்ள இந்த கப்பல் எதிர்வரும் 19 ஆம் திகதி பிற்பகல் நாட்டில் இருந்து வெளியேறவுள்ளதாக குறித்த கப்பல் நிறுவனம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் நிர்வாக கட்டுப்பாட்டாளருக்கு அறிவித்துள்ளது.

சீனாவின் ‘யுவான் வாங் 5’ என்ற கப்பல் அந்நாட்டின் ஆராய்ச்சி மற்றும் ஆய்வு வகைக் கப்பலின் மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்தது.

இந்த வகையான ஏழு கப்பல்களை சீனா கொண்டிருக்கின்றது. இந்தக் கப்பலானது, சீனாவின் ஜியாங்னான் கப்பல் கட்டுமானத் தளத்தில் கட்டப்பட்டு 2007 செப்டெம்பரில் சேவையில் இணைக்கப்பட்டது.

இந்த கப்பலை சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம் மற்றும் உத்தி ஆதரவுப் படை ஆகியன கூட்டிணைந்து இயக்குகின்றன.

இந்தவகைக் கப்பல்களை செயற்கைக்கோள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ஏவுதல், தகவல்தொடர்பாடல், மின்னணு வலையமைப்பு ஆகிய செயற்பாடுகளை கண்காணிக்கப் பயன்படுத்துகிறது.

இறுதியாக, ‘யுவான் வாங் 5’ கப்பலானது, சீனாவின் ‘லாங் மார்ச் 5பி’ ஏவுகணை விண்வெளிக்கு ஏவப்பட்டபோது ஆய்வகத்தொகுதி மற்றும் கடற்பரப்பினைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest news

சிட்னி அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பெண் சடலமாக மீட்பு – விசாரணைகள் ஆரம்பம்

மேற்கு சிட்னி அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பெண்ணின் சடலத்தை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு காரணம் குடும்ப தகராறு என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விக்டோரியா அரசு ஊழியர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு இரட்டிப்பு

விக்டோரியாவில் பொதுத்துறை ஊழியர்களுக்கான வருடாந்திர ஊதிய உயர்வு இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது வருடத்திற்கு 1.5 வீத சம்பள அதிகரிப்புக்கு...

YouTube-இல் அதிரடி மாற்றம்! இனி இந்த வசதியை பயன்படுத்த முடியாது

யூடியூபில் ஸ்டோரீஸ் என்ற வசதி நீக்கப்பட உள்ளதாக, கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.கூகுள் நிறுவனத்தில் பிரபலமான செயலியாக அறியப்பட்டும் யூடியூப்பில், ஸ்டோரீஸ் என்ற வசதி...

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இலங்கையர் என்ற பெருமையை பெற்ற ஈழத் தமிழர்

இலங்கையில் பிறந்து இங்கிலாந்தில் புலம்பெயர்ந்து வாழும் 46 வயதான விவேகானந்தன் துஷியந்தன் , முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் நினைவேந்தலை 8849 மீற்றர் உயரமான...

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இலங்கையர் என்ற பெருமையை பெற்ற ஈழத் தமிழர்

இலங்கையில் பிறந்து இங்கிலாந்தில் புலம்பெயர்ந்து வாழும் 46 வயதான விவேகானந்தன் துஷியந்தன் , முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் நினைவேந்தலை 8849 மீற்றர் உயரமான...

பெர்த் மருத்துவர்களுக்கு ChatGPT தடை

AI அல்லது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு பெர்த் நகரத்தில் உள்ள மருத்துவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நோயாளிகளின் தனிப்பட்ட...