ஆஸ்திரேலியாவில் ஜூன் மாதம் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில், ஊதிய வளர்ச்சி விகிதம் 0.7 சதவீதமாக பதிவாகியுள்ளது.
எப்படியிருப்பினும் உயரும் பணவீக்கத்துடன் ஒப்பிடுகையில் இது குறைவான எண்ணிக்கையே என்று புள்ளியியல் அலுவலகம் கூறுகிறது.
2021ஆம் ஆண்டு ஜூன் முதல் இந்த ஆண்டு ஜூன் வரை, சம்பள வளர்ச்சி விகிதம் 2.6 சதவீதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது 2014 ஆம் ஆண்டு முதல் 12 மாத காலப்பகுதியில் ஆஸ்திரேலியாவில் பதிவுசெய்யப்பட்ட மிக உயர்ந்த ஊதிய வளர்ச்சி விகிதமாகும்.
2023 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், எதிர்பார்க்கப்படும் ஊதிய வளர்ச்சி விகிதம் 3.5 சதவீதமாக இருக்கும்.
இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில், தனியார் துறை வேலைகளின் சம்பள வளர்ச்சி விகிதம் அரசு வேலைகளை விட அதிகமாக உள்ளது என்று புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.