Newsகுரங்கு அம்மை அச்சம் - குரங்குகளை கொல்லும் மக்கள்

குரங்கு அம்மை அச்சம் – குரங்குகளை கொல்லும் மக்கள்

-

குரங்கு அம்மை நோய்க்கு புதிய பெயர் வைக்க உலக சுகாதார மையம் முடிவு செய்துள்ளது. ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட குரங்கு அம்மை நோயால் இந்தியா உட்பட உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். குரங்கு அம்மை நோய் சர்வதேச சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

சமீப காலமாக குரங்கு அம்மை நோயின் பெயர் பாரபட்சமாக இருப்பதாக விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர். அது மட்டுமின்றி 1958ஆம் ஆண்டு டென்மார்க் நாட்டில் தான் முதல் முதலாக குரங்கு வைரஸ் நோய் கண்டு பிடிக்கப்பட்டது. இதனை அடுத்து இந்த நோய் காரணமாக ஏராளமான குரங்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் பல குரங்குகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இதை போல சமீபத்தில் பிரேசிலில், நோய் பயத்தால் மக்கள் குரங்குகளுக்கு விஷம் வைத்து கொன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதனால் உடனடியாக குரங்கு அம்மை நோய்க்கு புதிய பெயர் வைக்க உலக சுகாதார மையம் முடிவு செய்துள்ளது. அதன்படி, குரங்கு அம்மை என்ற பெயருக்கு மாற்றாக வேறு பெயரை பொதுமக்கள் பரிந்துரைக்கலாம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவின் சிறந்த 10 கடற்கரைகள் எவை தெரியுமா?

2025 ஆம் ஆண்டில் சுற்றுலாப் பயணிகளுக்கு ஆஸ்திரேலியாவின் சிறந்த 10 கடற்கரைகள் வெளியிடப்பட்டுள்ளன. முதல் இடத்தை டாஸ்மேனியா கடற்கரையில் உள்ள Bay of Fires பிடித்துள்ளது . இந்த...

அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இந்திய குடியேறிகளின் நிலை

அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இந்திய குடியேறிகள் குழு ஒன்று, அதிபர் டொனால்ட் டிரம்பின் நடவடிக்கைகளுக்கு எதிராகப் பேசியுள்ளது. கடந்த புதன்கிழமை வட இந்தியாவில் நூறு இந்திய குடியேறிகளை...

கோவிட்-19ஆல் வேறு அரிய நோய்கள் ஏற்படும் ஆபத்து இருப்பதாக தகவல்

முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட நபர்களில் COVID-19 நோயால் இறந்தவர்களில் எட்டு அரிய நோய்கள் அடையாளம் காணப்பட்டதாக லான்செட் டிஜிட்டல் ஹெல்த் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். எதிர்கால தொற்றுநோய் திட்டமிடல்...

நெருக்கடியில் உள்ள மேற்கு ஆஸ்திரேலியாவின் சுகாதார சேவை

மேற்கு ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டுப் பணியாளர்களுக்குப் பதிலாக உள்ளூர் சுகாதாரப் பணியாளர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டியதன் அவசியத்தை மருத்துவ சங்கம் வலியுறுத்துகிறது. தற்போது அதிக எண்ணிக்கையிலான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்...

கோவிட்-19ஆல் வேறு அரிய நோய்கள் ஏற்படும் ஆபத்து இருப்பதாக தகவல்

முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட நபர்களில் COVID-19 நோயால் இறந்தவர்களில் எட்டு அரிய நோய்கள் அடையாளம் காணப்பட்டதாக லான்செட் டிஜிட்டல் ஹெல்த் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். எதிர்கால தொற்றுநோய் திட்டமிடல்...

வார இறுதியில் வடக்கு குயின்ஸ்லாந்தில் மேலும் வெள்ள அபாய எச்சரிக்கை

வார இறுதியில் வடக்கு குயின்ஸ்லாந்து மக்களுக்கு மேலும் வெள்ள எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. டவுன்ஸ்வில்லுக்கு தெற்கே ஹௌடன் ஆற்றின் குறுக்கே உள்ள கெய்ர்ன்ஸ் முதல் ராக்ஹாம்ப்டன் வரையிலான பகுதி,...