இலங்கையில் 02 நிர்மாணத் திட்டங்களுக்காக லட்சக்கணக்கான டொலர்களை லஞ்சம் வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் சிட்னியில் வசிக்கும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலிய பெடரல் பொலிஸாரின் நீண்ட கால விசாரணையின் பலனாக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2009 மற்றும் 2016ஆம் ஆண்டுக்கு இடையில், சந்தேக நபர்கள் தொடர்புடைய திட்டங்கள் தொடர்பாக வெளிநாட்டு அரசாங்க அதிகாரிகளுக்கு 304,000 டொலர்கள் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட 67 மற்றும் 71 வயதுடைய இரு சந்தேக நபர்களும் அவுஸ்திரேலியாவில் இயங்கி வரும் பாரிய அளவிலான பொறியியல் நிறுவனத்தின் (SMEC) பிரதிநிதிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
FBI – கனடா காவல்துறை – இலங்கை – இந்தியா மற்றும் பங்களாதேஷ் காவல்துறையை இணைத்து இந்த மாபெரும் நடவடிக்கையை ஆஸ்திரேலிய பெடரல் காவல்துறை செயல்படுத்தியுள்ளது.
இதற்கு ஆஸ்திரேலிய முதலீட்டு ஆணையம் – வர்த்தக ஆணையமும் ஆதரவு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
சந்தேகநபர்களுக்கு 10 வருட சிறைத்தண்டனை விதிக்கப்படும் என ஆஸ்திரேலிய பெடரல் பொலிஸ் கணித்துள்ளது.