Newsஜனனியின் நட்பு தான் வேண்டும் - GP முத்து கூறிய காரணம்

ஜனனியின் நட்பு தான் வேண்டும் – GP முத்து கூறிய காரணம்

-

தமிழில் தற்போது BIGG BOSS சீசன் 6 நிகழ்ச்சி ஆரம்பமாகி உள்ள நிலையில் ஒவ்வொரு தினமும் மிக பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது.

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசன்களாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும். போட்டியாளர்கள் அனைவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ள நிலையில், ஒவ்வொரு தருணமும் பரபரப்பாகவும், சுவாரஸ்ய நிகழ்வுகளுடனும் சென்று கொண்டிருக்கிறது. மேலும், டிஸ்னி ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகியும் வருகிறது.

ஆரம்பத்தில் கலகலப்பாக தொடங்கிய இந்த நிகழ்ச்சி, அடுத்தடுத்து டாஸ்க்குகள் மூலம் சூடு பிடிக்கவும் தொடங்கி உள்ளது. போட்டியாளர்கள் மத்தியில் ஏராளமான விவாதங்களும் தற்போது தொடங்கி உள்ளதால் ரசிகர்களும் விறுவிறுப்பாக இதனை கண்டு களித்து வருகின்றனர். இந்நிலையில், ஜிபி முத்து மற்றும் ஜனனி ஆகியோர் இடையே உரையாடல் தொடர்பான வீடியோ, தற்போது பார்வையாளர்கள் பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.

பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த நிமிடம் முதல் ஜிபி முத்து செய்யும் ஒவ்வொரு விஷயமும் இணையத்தில் வைரல் ரகங்கள் தான். தனியாக வீட்டில் இருந்த போது பயத்துடன் கமலிடம் பேசியது, மழையில் போட்ட ஆட்டம், நாய் சத்தம் கேட்டு பயந்தது என ஜிபி முத்து செய்யும் அனைத்து விஷயங்களும் ட்ரெண்ட் ஆகத் தான் செய்கிறது.

அந்த வகையில், தற்போது நடந்த ஒரு சுற்றில், உங்களுக்கு பிக்பாஸ் வீட்டில் யாருடைய நட்பு வேண்டும் என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த ஜிபி முத்து, இலங்கையை சேர்ந்த தொகுப்பாளினி ஜனனியின் நட்பு தான் வேண்டும் என கூறினார். இதற்காக அவர் கூறிய காரணம் தான், தற்போது இந்தியாவை தாண்டி இலங்கை மக்களின் நெஞ்சங்களையும் வென்றுள்ளது.

“தமிழ்நாட்டை பொறுத்தவரையில் இங்குள்ள எல்லோருக்கும் என்னை தெரியும். ஆனால், தங்கச்சி (ஜனனி) என்ன சொன்னார் என்றால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜிபி முத்துவுடன் கலந்து கொள்ள போவதால் அவரது நண்பர்கள் உள்ளிட்ட அனைவரும் கொடுத்து வைத்தவர்கள் என ஜனனியிடம் சொல்லி உள்ளார்கள். இதனால், தங்கச்சியுடன் நட்பு மூலமா இலங்கை மக்களின் நட்பு இன்னும் தொடர வேண்டும் என எதிர்பார்க்கிறேன். என்றைக்கும் நாம் பாசமாக இருப்போம்” என்றார்.

தொடர்ந்து பேசிய ஜனனி, “ஏற்கனவே அங்குள்ள மக்களுக்கு உங்களை பிடிக்கும். இதனால் அதை பற்றி நீங்கள் பெரிதாக யோசிக்க வேண்டாம்” என தெரிவித்துள்ளார். இலங்கை மக்கள் நட்பு தொடர்பாக ஜிபி முத்து பேசிய வீடியோ, தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

Latest news

மீண்டும் இயக்கப்படும் உலகின் மிகப் பெரிய அணுமின் நிலையம்

ஜப்பானில் உள்ள உலகின் மிகப் பெரிய அணுமின் நிலையம் மீண்டும் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியில்...

ஆஸ்திரேலிய தினத்தைக் கொண்டாட வருபவர்களுக்கான சிறப்பு அறிவிப்பு

வரும் 26 ஆம் திகதி வரும் ஆஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு, சிட்னி ஓபரா ஹவுஸ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியை பலத்த பாதுகாப்பு வளையத்துடன் மூட...

விக்டோரியாவில் நோயாளிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்ட Frankston மருத்துவமனை

Peninsula பல்கலைக்கழக மருத்துவமனையான Frankston மருத்துவமனை, புதுப்பித்தல் பணிகள் முடிந்ததைத் தொடர்ந்து, நேற்று ஜனவரி 20 ஆம் திகதி நோயாளிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டது. விக்டோரியன் மாநில அரசு...

நிழல் அமைச்சரவையிலிருந்து 3 நேஷனல்ஸ் செனட்டர்கள் திடீரென நீக்கம்

மத்திய அரசு அறிமுகப்படுத்திய புதிய வெறுப்புப் பேச்சுச் சட்டங்களை ஆதரிப்பதற்காக லிபரல் கட்சியுடன் உடன்படாததால், மூன்று நேஷனல்ஸ் செனட்டர்கள் நிழல் அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர். செனட்டர்கள்...

நிழல் அமைச்சரவையிலிருந்து 3 நேஷனல்ஸ் செனட்டர்கள் திடீரென நீக்கம்

மத்திய அரசு அறிமுகப்படுத்திய புதிய வெறுப்புப் பேச்சுச் சட்டங்களை ஆதரிப்பதற்காக லிபரல் கட்சியுடன் உடன்படாததால், மூன்று நேஷனல்ஸ் செனட்டர்கள் நிழல் அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர். செனட்டர்கள்...

NSW இல் பல புலம்பெயர்ந்த ஓட்டுநர்களுக்கு புதிய ஓட்டுநர் உரிம விதிகள்

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ஓட்டுநர் உரிமச் சட்டங்களின் கீழ், நியமிக்கப்பட்ட நாடுகளில் இருந்து ஓட்டுநர் உரிமம் பெற்றவர்கள் NSW மாநிலத்தில் ஓட்டுநர்...