Newsஇலங்கையர்கள் நாடு கடத்தப்படுவார்கள் - ஆஸ்திரேலியா கடும் எச்சரிக்கை

இலங்கையர்கள் நாடு கடத்தப்படுவார்கள் – ஆஸ்திரேலியா கடும் எச்சரிக்கை

-

இலங்கையர்களுக்கு ஆஸ்திரேலியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் பிரவேசிக்க முயற்சிக்கும் இலங்கையர்களுக்கே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் செல்லுபடியாகும் வீசா இன்றி ஆஸ்திரேலியா வர முயற்சிப்பவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் ஆஸ்திரேலியா எச்சரித்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் எல்லைக்காவல் தளபதி ரியர் அட்மிரல் ஜஸ்டின் ஜோன்ஸ், அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தபோதே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

சட்டவிரோதமாக மீன்பிடித்தல், கடற்கொள்ளையர், பயங்கரவாதம் மற்றும் மக்கள் கடத்தல் போன்ற நாடுகடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கு இலங்கையுடன் இணைந்து பணியாற்றுவதற்கான உறுதிப்பாட்டின் நிமித்தமே இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டதாக ஜஸ்டின் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கையும் ஆஸ்திரேலியாவும் சட்டவிரோதமாக எல்லைகளை கடக்க முயற்சிக்கும் எந்தவொரு படகையும் தடுப்பதற்கும், இடையூறு செய்வதற்கும், இடைமறித்து திருப்பி அனுப்புவதற்கும், கூட்டுப்பொறுப்பை கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

2022 மே மாதம் முதல், ஆஸ்திரேலியாவிற்கு ஒழுங்கற்ற கடல்சார் குடியேற்ற முயற்சியில் ஈடுபட்டிருந்த சுமார் 9ஆயிரம் இலங்கையர்கள், அவுஸ்திரேலிய அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

Latest news

மூழ்கி வரும் சீனாவின் பல முக்கிய நகரங்கள்

சீனாவின் முக்கிய நகரங்களில் சுமார் 270 மில்லியன் மக்கள் மூழ்கும் நிலத்தில் வாழ்கின்றனர் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. மனித செயல்பாடு சீனாவின் முக்கிய நகரங்களில்...

ஆஸ்திரேலியாவில் உள்ள மனநல மருத்துவர்களின் வேண்டுகோள்

மனநல சேவை நிபுணர் பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு தலையிட வேண்டும் என மனநல மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த மாதம், 500க்கும் மேற்பட்ட மனநல மருத்துவர்கள்,...

எறும்புகளால் $22 பில்லியன் செலவாகும் என அபாயம்

நெருப்பு எறும்புகளால் ஆஸ்திரேலியாவில் 2040 ஆம் ஆண்டில் $22 பில்லியன் செலவாகும் என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. இந்த எறும்புகள் ஆஸ்திரேலியாவின் மிக மோசமான ஆக்கிரமிப்பு பூச்சிகளில்...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் வேலையின்மை விகிதம்

ஆஸ்திரேலியாவின் வேலையின்மை விகிதம் கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளது. அதன்படி, மார்ச் மாதத்தில் 6600 பேர் வேலை இழந்த பிறகு, வேலையின்மை விகிதம் 3.7ல் இருந்து...

எறும்புகளால் $22 பில்லியன் செலவாகும் என அபாயம்

நெருப்பு எறும்புகளால் ஆஸ்திரேலியாவில் 2040 ஆம் ஆண்டில் $22 பில்லியன் செலவாகும் என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. இந்த எறும்புகள் ஆஸ்திரேலியாவின் மிக மோசமான ஆக்கிரமிப்பு பூச்சிகளில்...

மெல்போர்னைச் சுற்றி அதிக வீட்டுத் தேவை உள்ள பகுதிகள் அடையாளம்

மெல்போர்ன் பெருநகரில் அதிக வீட்டு தேவை உள்ள பகுதிகளை கண்டறிய புதிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, மெல்பேர்னின் 19 உள் பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இந்த ஆய்வு...