Newsஜெருசலத்தை இஸ்ரேலின் தலைநகரமாக இனி அங்கீகரிக்கப்போவதில்லை - ஆஸ்திரேலியா

ஜெருசலத்தை இஸ்ரேலின் தலைநகரமாக இனி அங்கீகரிக்கப்போவதில்லை – ஆஸ்திரேலியா

-

மேற்கு ஜெருசலத்தை இஸ்ரேலின் தலைநகரமாக இனி அங்கீகரிக்கப்போவதில்லை என்று ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் தான் அந்நகரின் நிலை குறித்து முடிவெடுக்கப்படவேண்டும் என்று ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் (Penny Wong)கூறினார்.

ஆஸ்திரேலியாவின் தூதரகம் டெல் அவிவ் நகரில் தான் இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

2018ஆம் ஆண்டு அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஸ்காட் மோரிசன் தலைமையில் ஆஸ்திரேலியா மேற்கு ஜெருசலத்தை இஸ்ரேலின் தலைநகரமாக அங்கீகரித்தது.

அப்போது சிட்னி நகரில் யூதர்கள் அதிகம் இருந்த பகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றிபெற மோரிசன் அரசாங்கம் அந்த முடிவை எடுத்ததாக வோங் குறை கூறினார்.

Latest news

பயங்கரவாத தாக்குதல்களிலிருந்து ஆஸ்திரேலியா விடுபட்டுள்ளது என்ற கருத்தை மாற்றிய Bondi தாக்குதல்

Bondi கடற்கரையில் யூத சமூகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, ஆஸ்திரேலியா ஒரு கடுமையான உண்மையை எதிர்கொள்ள வேண்டும் என்று...

விக்டோரியாவில் சுகாதார ஊழியர்களின் பாரிய வேலைநிறுத்தம்

விக்டோரியாவில் 10,000க்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தத்தைத் தொடங்க முடிவு செய்துள்ளனர். மருத்துவமனை ஊழியர்கள், தியேட்டர் தொழில்நுட்ப வல்லுநர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் பிற ஊழியர்கள்...

புதிய விமானங்களை சேர்த்துள்ள Qantas Airlines

ஆஸ்திரேலியாவின் முன்னணி மற்றும் மிகப்பெரிய விமான நிறுவனமான Qantas, இரண்டு புதிய விமானங்களைச் சேர்த்துள்ளது. அதன்படி, இரண்டு Airbus A220 விமானங்கள் நிறுவனத்தின் விமானப் படையில் இணைந்துள்ளதாக அவர்கள்...

தீயணைப்பு சேவை குறித்த ஜெசிந்தாவின் அறிக்கைக்கு பட்ஜெட் அலுவலகம் எதிர்ப்பு

கிராமப்புற தீயணைப்பு சேவைக்கான (CFA) நிதி குறைக்கப்படவில்லை என்ற விக்டோரியன் பிரதமர் ஜெசிந்தா ஆலனின் கூற்றை நாடாளுமன்ற பட்ஜெட் அலுவலகம் (PBO) நிராகரித்துள்ளது. பிரதமர் தனது அரசாங்கம்...

புதிய விமானங்களை சேர்த்துள்ள Qantas Airlines

ஆஸ்திரேலியாவின் முன்னணி மற்றும் மிகப்பெரிய விமான நிறுவனமான Qantas, இரண்டு புதிய விமானங்களைச் சேர்த்துள்ளது. அதன்படி, இரண்டு Airbus A220 விமானங்கள் நிறுவனத்தின் விமானப் படையில் இணைந்துள்ளதாக அவர்கள்...

பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்ட சிட்னி மீன் சந்தை

830 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமான செலவில் கட்டப்பட்ட புதிய சிட்னி மீன் சந்தை நேற்று அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது. மேலும் பெரும் கூட்டம் காரணமாக பலர் திருப்பி...