Newsஜெருசலத்தை இஸ்ரேலின் தலைநகரமாக இனி அங்கீகரிக்கப்போவதில்லை - ஆஸ்திரேலியா

ஜெருசலத்தை இஸ்ரேலின் தலைநகரமாக இனி அங்கீகரிக்கப்போவதில்லை – ஆஸ்திரேலியா

-

மேற்கு ஜெருசலத்தை இஸ்ரேலின் தலைநகரமாக இனி அங்கீகரிக்கப்போவதில்லை என்று ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் தான் அந்நகரின் நிலை குறித்து முடிவெடுக்கப்படவேண்டும் என்று ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் (Penny Wong)கூறினார்.

ஆஸ்திரேலியாவின் தூதரகம் டெல் அவிவ் நகரில் தான் இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

2018ஆம் ஆண்டு அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஸ்காட் மோரிசன் தலைமையில் ஆஸ்திரேலியா மேற்கு ஜெருசலத்தை இஸ்ரேலின் தலைநகரமாக அங்கீகரித்தது.

அப்போது சிட்னி நகரில் யூதர்கள் அதிகம் இருந்த பகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றிபெற மோரிசன் அரசாங்கம் அந்த முடிவை எடுத்ததாக வோங் குறை கூறினார்.

Latest news

OpenAI மீது வழக்குத் தொடர்ந்த எலான் மஸ்க்!

அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க், செய்யறிவு தொழில்நுட்ப நிறுவனமான OpenAI மற்றும் அதன் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார். ஒப்பந்த மீறல்,...

இளைஞர்களிடையே உயரும் எலக்ட்ரானிக் சிகரெட்டுகளின் பயன்பாடு!

சமீபத்திய ஆண்டுகளில் 25 வயதுக்குட்பட்டவர்களிடையே எலக்ட்ரானிக் சிகரெட்டுகளின் பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ளது என்று ஒரு கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. அந்த பழக்கத்தில் இருந்து விடுபட மருத்துவ உதவியை நாடும்...

நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் உட்பட பல பகுதிகளுக்கு எச்சரிக்கை

அவுஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரையின் பல பகுதிகளுக்கு காற்று மற்றும் கரடுமுரடான கடல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தஸ்மேனியாவுக்கு தெற்கே கடலில் ஏற்பட்டுள்ள ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக...

லீப் தினத்தில் பிறந்த தாய்க்கு லீப் தினத்தில் பிறந்த குழந்தை

40 ஆண்டுகளுக்கு முன்பு லீப் தினத்தில் பிறந்த அமெரிக்கப் பெண், இவ்வருட லீப் தினத்தன்று ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். வட கரோலினாவிலுள்ள நிறுவனமொன்றில் மருத்துவ உதவிப்...

லீப் தினத்தில் பிறந்த தாய்க்கு லீப் தினத்தில் பிறந்த குழந்தை

40 ஆண்டுகளுக்கு முன்பு லீப் தினத்தில் பிறந்த அமெரிக்கப் பெண், இவ்வருட லீப் தினத்தன்று ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். வட கரோலினாவிலுள்ள நிறுவனமொன்றில் மருத்துவ உதவிப்...

அவுஸ்திரேலியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ள தயாராகி வருகிறார் பிரித்தானிய அரசர்

பிரித்தானியாவின் மன்னர் சார்லஸ் இந்த ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்வார் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அரச குடும்பத்தார் வருகை தொடர்பான திட்டங்கள் குறித்து தற்போது மத்திய அரசு...