Newsபெர்த்தில் இருந்து சிட்னிக்கு 47 நாட்கள் ஓடி சாதனை படைத்த நபர்!

பெர்த்தில் இருந்து சிட்னிக்கு 47 நாட்கள் ஓடி சாதனை படைத்த நபர்!

-

பெர்த்திலிருந்து சிட்னிக்கு 47 நாட்களில் 3953 கிலோமீட்டர் ஓடி நெட் பிரொக்மென் (Nedd Brockmann) சாதனை புரிந்துள்ளார்.

ஓட்டத்தைப் பெர்த் நகரில் தொடங்கி சிட்னி நகரில் அவர் முடித்தார். வெயில்மழை என்று பாராமல் ஓடிய அவர் தமது ஓட்டப் பயணத்தை மக்களுடன் சமூகத் தளங்களில் பகிர்ந்துகொண்டே வந்தார்.

23 வயதான அவர் மின்னியல் வல்லுநராகப் பணிபுரிகிறார் என செய்தி நிறுவனம் கூறியது.

அவர் தொண்டூழியத்திற்காக ஒரு மில்லியன் ஆஸ்திரேலிய டொலர் நிதி திரட்டத் திட்டமிட்டார்.

இறுதியில் அவர் 2.5 மில்லியன் ஆஸ்திரேலிய டொலர் நிதி திரட்டியதாகத் தெரிய வந்துள்ளது.

ஆயிரக்கணக்கானோர் போண்டி (Bondi) கடற்கரைக்குச் சென்று அவருக்கு ஆதரவளித்தனர்.

Latest news

Modified மின்-பைக்குகளை தடை செய்யும் விக்டோரியாவின் மெட்ரோ மற்றும் பிராந்திய ரயில் சேவைகள்

பாதுகாப்பு அபாயங்கள் காரணமாக விக்டோரியாவின் ரயில் வலையமைப்பில் மாற்றியமைக்கப்பட்ட மின்சார மிதிவண்டிகளுக்கு புதிய தடை விதிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 21 முதல், மெட்ரோ மற்றும் பிராந்திய ரயில் சேவைகளில்...

அமெரிக்க பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு

அமெரிக்காவில் உள்ள Brown பல்கலைக்கழகத்தில் உள்ள பொறியியல் கட்டிடத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் எட்டு பேர் காயமடைந்தனர். தாக்குதலைத் தொடர்ந்து Ivy...

ஆஸ்திரேலியாவில் உருவாக்கப்பட்டுள்ள மார்பகப் புற்றுநோயைத் தடுக்கும் ஒரு புதிய சிகிச்சை

புற்றுநோய் சிகிச்சைத் துறையில் ஒரு புரட்சிகரமான புதிய கண்டுபிடிப்பு ஆஸ்திரேலியாவிலிருந்து பதிவாகியுள்ளது. Garvan Institute of Medical Research-இல் ஆஸ்திரேலியா தலைமையிலான ஆராய்ச்சி மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளது...

மியன்மாரில் மருத்துவமனை மீது தாக்குதல் – 34 பேர் பலி!

மியன்மாரில் இராணுவத்துக்கும், கிளர்ச்சிக் குழுக்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ரகைன் மாகாணத்தின் மிராக்-யூ நகரில் உள்ள அரசு பொது...

பெர்த்தின் பல பகுதிகளுக்கு காட்டுத்தீ எச்சரிக்கைகள்

பெர்த் நகருக்கு அருகிலுள்ள பல பகுதிகளில் காட்டுத்தீ அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அங்கு கடும் வெப்பம் நிலவுகிறது. பெர்த்துக்கு வெளியே அமைந்துள்ள ஜூலிமார், மூண்டின் மற்றும் சிட்டெரின்...

துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பின் மூடப்பட்ட Bondi கடற்கரை

துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பின் சிட்னியின் போண்டி கடற்கரை பகுதி பூட்டப்பட்டுள்ளது. நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக போலீசார் அவசர...