Newsஆஸ்திரேலியாவில் தடையின்றி எரிவாயு வழங்க நடவடிக்கை!

ஆஸ்திரேலியாவில் தடையின்றி எரிவாயு வழங்க நடவடிக்கை!

-

ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு குளிர்காலத்திற்குள் எரிவாயு விநியோகத்தை தடையின்றி பராமரிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க மத்திய எரிசக்தி அமைச்சர் கிறிஸ் போவன் மற்றும் மாநில அரசுகளின் எரிசக்தி அமைச்சர்கள் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

அதன்படி, AEMO அல்லது ஆஸ்திரேலிய எரிசக்தி ஒழுங்குமுறை முகமைக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்க, தற்போதுள்ள பல சட்டங்கள் மாற்றப்பட உள்ளன.

எதிர்வரும் 02 வருடங்களில் எரிவாயு விலை சுமார் 40 வீதத்தால் அதிகரிக்கப்படும் என இந்த வருட வரவு செலவுத் திட்டத்தை சமர்பிக்கும் போது மத்திய திறைசேரி அமைச்சர் ஜிம் சால்மர்ஸ் விடுத்த எச்சரிக்கையுடன் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதனிடையே, மின்சாரம் மற்றும் எரிவாயு விலையை குறைக்க முடியுமா என விசாரிக்கப்படும் என மத்திய நிதித்துறை அமைச்சர் ஜிம் சால்மர்ஸ் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய-உக்ரைன் நெருக்கடியால், உலகம் முழுவதும் எரிசக்தி விலை கணிசமாக உயர்ந்துள்ளதாகவும், அதில் இருந்து ஆஸ்திரேலியாவும் தப்ப முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், நுகர்வோருக்கு நிவாரணம் கிடைத்தால் அதை வழங்க மத்திய அரசு தயங்காது என நிதித்துறை அமைச்சர் வலியுறுத்தினார்.

Latest news

விலங்குகளுக்கு பதிலாக மனித இரத்தத்தை தேடும் கொசுக்கள்

கோடை காலத்தில் வெளியில் நேரத்தை செலவிடும் மக்களை கொசு தொல்லைகள் கடுமையாக பாதிக்கின்றன. பிரேசிலில் விஞ்ஞானிகள் நடத்திய டிஎன்ஏ பரிசோதனையில், விலங்குகளை விட கொசுக்கள் மனிதர்களைக் கடிக்க...

16 வயதுக்குட்பட்டவர்களின் 50,000 சமூக ஊடகக் கணக்குகளை நீக்குவதாக அரசாங்கம் உறுதி

16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மீதான சமூக ஊடகத் தடையின் முதல் வாரத்தில் 4.7 மில்லியன் சமூக ஊடகக் கணக்குகள் நீக்கப்பட்டதாக தகவல் தொடர்பு அமைச்சர் அன்னிகா...

வெனிசுலாவின் விடுதலைக்காக டிரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு

வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ, வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் ரகசிய சந்திப்பு நடத்தியுள்ளார். இந்த சந்திப்பின் போது...

விக்டோரியாவில் மனித உடல் பாகங்கள் கண்டுபிடிப்பு

விக்டோரியாவில் உள்ள Phillip தீவில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. Silverleaves-இன் Hazelwood Ct பகுதியில் உள்ள ஒரு நிலத்தில் கட்டுமானப் பணியின் போது இந்த மனித உடல்...

விக்டோரியாவில் மனித உடல் பாகங்கள் கண்டுபிடிப்பு

விக்டோரியாவில் உள்ள Phillip தீவில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. Silverleaves-இன் Hazelwood Ct பகுதியில் உள்ள ஒரு நிலத்தில் கட்டுமானப் பணியின் போது இந்த மனித உடல்...

விக்டோரியா காட்டுத்தீயில் 228 வீடுகள் எரிந்து நாசம்

கடந்த வாரத்தில் விக்டோரியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயில் 228 வீடுகள் உட்பட 700 கட்டிடங்களும், 400,000 ஹெக்டேர்களுக்கும் அதிகமான நிலங்களும் நாசமாகியுள்ளன. ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால்...