Breaking Newsஆஸ்திரேலியாவில் இலங்கை தமிழ் சிறுமிக்கு 10வது பிறந்த நாளில் அரசாங்கம் கொடுத்த...

ஆஸ்திரேலியாவில் இலங்கை தமிழ் சிறுமிக்கு 10வது பிறந்த நாளில் அரசாங்கம் கொடுத்த பரிசு!

-

ஆஸ்திரேலியாவில் பிறந்த இலங்கை தமிழ் சிறுமிக்கு 10 வருடங்களின் பின்னர் தனது பிறந்த நாள் அன்று குடியுரிமை கிடைத்துள்ளது.

இலங்கை தமிழ் சிறுமிக்கு இப்போது 10 வயதான நிலையில் அவர் அந்நாட்டின் குடியுரிமை பெரும் தகுதியை அடைந்துள்ளார்.

அவரது குடியுரிமைக்காக விண்ணப்பித்திருந்த நிலையில், அரசாங்கத்திடமிருந்து அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக பதில்கடிதம் கிடைத்துள்ளது. இதனால், மொத்த குடும்பமும் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். மேலும், இது அங்கீகரிக்கப்படாத குடும்பத்திற்கு நம்பிக்கையை அளித்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள Ballarat நகரத்தில் வசிக்கும் நீலவண்ணன் பரமானந்தன் மற்றும் அவரது குடும்பத்தினர் தங்கள் மகள் நிவேவின் 10-வது பிறந்தநாளை அக்டோபர் 24-ஆம் திகதி அன்று, நண்பர்களை அழைத்து கேக் வெட்டி கொண்டாடினர்.

ஏனெனில் அவர்களுக்கு இது தங்கள் குழந்தையின் சாதாரண பிறந்தநாள் அல்ல, இந்த குடும்பத்திற்கும் அவர்களை அறிந்தவர்களுக்கு இது ஒரு சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.

அப்பா (நீலவண்ணன்), அம்மா, மூன்று பெண் குழந்தைகள் கொண்ட இந்த குடும்பத்தில், ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்ற ஒரே உறுப்பினர் என்றால், அது அவர்களது கடைசி மகள் நிவே மட்டும் தான்.

நீலவண்ணன் தனது சமூக வலைதள பக்கத்தில் தனது குடும்பத்தின் புகைப்படத்தையும், மகள் குடியுரிமைக்கு தகுதி பெற்றிருக்கு மகிழ்ச்சியையும் பகிர்ந்துள்ளார்.

Latest news

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மின் சாதன நிறுவனத்திற்கு மில்லியன் கணக்கில் அபராதம்

ஆஸ்திரேலியாவில் பெரிய அளவிலான மின் சாதனம் மற்றும் வீட்டு உபகரண பிராண்டான The Good Guys நிறுவனத்திற்கு பெடரல் நீதிமன்றம் 13.5 மில்லியன் டாலர் அபராதம்...

பெருங்குடல் புற்றுநோய்க்கு மருந்து தயார் – ரஷ்யா அறிவிப்பு

பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி பயன்பாட்டுக்கு தயார் நிலையில் உள்ளதாக ரஷ்யாவின் மத்திய மருந்து மற்றும் உயிரியல் முகவரக அமைப்பு தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி...

கோலாக்களைப் பாதுகாக்கும் அரசாங்கத் திட்டத்தை எதிர்க்கும் மரத்தொழில் குழுக்கள்

ஆஸ்திரேலியாவின் கோலாக்களை அழிவிலிருந்து பாதுகாக்கும் அரசாங்கத்தின் திட்டம் மரத் தொழில் குழுக்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. நியூ சவுத் வேல்ஸில் Great Koala தேசிய பூங்கா என்ற பெரிய...

சர்வதேச கவனத்தை ஈர்த்த காளான் கொலையாளி வழக்கின் இறுதித் தீர்ப்பு

சர்வதேச கவனத்தை ஈர்த்த காளான் கொலையாளி Erin Patterson வழக்கின் இறுதித் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விஷக் காளான்கள் கலந்த உணவை அளித்து...

சர்வதேச கவனத்தை ஈர்த்த காளான் கொலையாளி வழக்கின் இறுதித் தீர்ப்பு

சர்வதேச கவனத்தை ஈர்த்த காளான் கொலையாளி Erin Patterson வழக்கின் இறுதித் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விஷக் காளான்கள் கலந்த உணவை அளித்து...

மல்லிகைப்பூவால் விமான பயணத்தின் போது சிக்கலில் சிக்கிய பிரபல இந்திய நடிகை

நடிகை நவ்யா நாயர் விமானத்தில் மல்லிகைப்பூவை எடுத்துச் சென்றதால் ஆஸ்திரேலியாவில் அவருக்கு 125,000 ரூபாய் (இந்திய மதிப்பில்) அபராதம் விதிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின், விக்டோரியா நகரில் நடைபெற்ற ஓணம்...