Newsஆஸ்திரேலிய பெண்ணை கொன்றுவிட்டு தப்பிய இந்தியர் - தகவல் கொடுத்தால் 633,000...

ஆஸ்திரேலிய பெண்ணை கொன்றுவிட்டு தப்பிய இந்தியர் – தகவல் கொடுத்தால் 633,000 டொலர் பரிசு

-

ஆஸ்திரேலியாவில் கொலை செய்துவிட்டு இந்தியா தப்பிய கொலையாளி பற்றி துப்பு கொடுத்தால் 633,000 டொலர் பரிசு வழங்கப்படும் என ஆஸ்திரேலிய பொலிஸார் அறிவித்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் வாங்கட்டி கடற்கரையில் தனது நாயுடன் நடைபயிற்சி சென்ற டோயா கார்டிங்லி என்ற 24 வயதுடைய பெண் கொலை செய்யப்பட்டார்.

2018ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நடந்த இந்தக் கொலையை, ஆஸ்திரேலியாவில் இன்னிஸ்பெயில் என்ற இடத்தில் ஆண் தாதியாக வேலை செய்த ராஜ்விந்தர் கிங் என்ற 38 வயதுடையவரை கொலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆனால் இவர், கொலை நடந்த மறுநாளில் தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளை ஆஸ்திரேலியாவில் விட்டு விட்டு இந்தியாவுக்கு தப்பிவிட்டார்.

இது உறுதியாகி உள்ளது. இவரை 4 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய பொலிஸார் தேடுகின்றனர். ஆனால் இன்னும் சிக்கவில்லை. இந்த நிலையில், இவரை கைது செய்வதற்கு துப்பு தந்து உதவுபவருக்கு 633,000 ஆஸ்திரேலிய மொடர் ரொக்கப்பரிசை வழங்குவதாக குயின்ஸ்லாந்து பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இது அங்கு அறிவிக்கப்பட்டுள்ள மிக உயர்ந்த சன்மானம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் துப்பு பற்றி தகவல் அளிக்க குயின்ஸ் லேண்ட் பொலிஸார் ஒரு வாட்ஸ்அப் இணைப்பை உருவாக்கியுள்ளனர்.

ஆஸ்திரேலிய பெடரல் பொலிஸாருக்கு +911141220972 என்ற எண்ணில் அழைக்கலாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் மலிவு விலையில் வீடுகள் காணப்படும் பகுதிகள்

வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு புதிய வீடு வாங்குபவர்களுக்கு ஆஸ்திரேலியாவின் மிகக் குறைந்த விலையில் உள்ள புறநகர்ப் பகுதிகளை ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. சிட்னி, பிரிஸ்பேன்,...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் உயர்ம் பியர் விலை

அவுஸ்திரேலியாவில் பியர் மீதான வரி அடுத்த வாரம் மீண்டும் அதிகரிக்கப்படுவதால் பியர் விலை உயரும் என ஊகங்கள் வெளியாகியுள்ளன. இந்த வரி அதிகரிப்பு நிதிப் பிரச்சினைகளை எதிர்நோக்கும்...

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் கறுப்புச் சந்தையாக உள்ள ரஷ்யா!

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரியிலிருந்து இன்று வரையில் போர் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ரஷிய படைகளால் சிறைபிடிக்கப்பட்ட உக்ரைன் போர்க் கைதிகளின் உடல்கள்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

ஒலிம்பிக் சரித்திரம் படைத்த ஆஸ்திரேலியாவின் ரக்பி அணி

இந்த வருட ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஏழு பேர் கொண்ட ரக்பி போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இன்று காலை பாரிஸில் நடைபெற்ற ஆட்டத்தில்...