விக்டோரியா மாநிலத்தில் புதிய கோவிட் அலைக்கான அறிகுறிகள் தென்படுவதாக மாநில தலைமை மருத்துவ அதிகாரி பேராசிரியர் பிரட் சுட்டன் எச்சரித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்ட அவர், அதைத் தடுக்க ஆறு நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்று கூறினார்.
- நல்ல காற்றோட்டம் உள்ள இடத்தில் இருங்கள்
- முடியாவிட்டால் முகக் கவசம் அணிதல்
- அறிகுறிகள் இருந்தால் விரைவான பரிசோதனை செய்துகொள்ளுங்கள்
- கோவிட் பாசிட்டிவ் என்றால் வீட்டில் சுய தனிமைப்படுத்தல்
- தடுப்பூசி செலுத்திக் கொள்ளுதல்
- அறிகுறிகள் இல்லாவிட்டால் மட்டுமே வீட்டை விட்டு வெளியே செல்லவும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.