News ஆஸ்திரேலியாவை உலுக்கும் வெள்ளம் - இந்த ஆண்டின் மிகப்பெரிய வெள்ளம்

ஆஸ்திரேலியாவை உலுக்கும் வெள்ளம் – இந்த ஆண்டின் மிகப்பெரிய வெள்ளம்

-

ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கில் கொட்டித் தீர்த்த அடைமழை காரணமாகத் திடீர் வெள்ளம் ஏற்பட்டு, உட்புறப் பகுதிகளில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

இருப்பிடங்களில் இருந்து வெளியேறுமாறு அப்பகுதிவாழ் ஆயிரக்கணக்கான மக்களுக்குப் புதிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது இந்த ஆண்டில் ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள 4ஆவது மிகப்பெரிய வெள்ளமாகும்.

நியூ சவுத் வேல்ஸ்சின் தென்மேற்குப் பகுதியிலும் விக்டோரியாவின் வடகிழக்குப் பகுதியிலும் ஒரே இரவில் மோசமான வானிலையால் ஆற்றின் கரைகள் உடைப்பெடுத்தன. வெள்ளப் பேரிடரால் ஏற்கனவே சோர்ந்து போயிருக்கும் மக்களுக்குத் துயர் மேல் துயர் ஏற்பட்டுள்ளது.

திடீர் வெள்ளம் ஆபத்தான சூழ்நிலையை உருவாக்குகிறது என்றும் மீட்பு முயற்சிகளில் மத்திய அரசாங்கம் மாநிலங்களுடன் நெருக்கமாகச் செயல்பட்டு வருகிறது என்றும் ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்ட்டனி அல்பனீசி (Anthony Albanese) Twitterரில் பதிவிட்டார்.

நியூ சவுத் வேல்ஸின் (New South Wales) கிராமப்புறங்களில் சாலைகள், பாலங்கள், பண்ணைகள் ஆகிய அனைத்தும் நீரில் மூழ்கின.

சிட்னியில் (Sydney) இருந்து வடமேற்கில் சுமார் 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள Molong என்னும் இடம்தான் வெள்ளத்தால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு 2,000க்கும் அதிகமானோர் வசிக்கின்றனர்.

வெள்ளத்தில் கப்பல் கொள்கலன்களும் வீட்டுப் பொருள்களும் மிதக்கும் காட்சி அடங்கிய காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன.

கப்பல் கொள்கல லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் வெள்ளம் ஏறிய சாலையில் நகர முடியாமல் சிக்கியிருப்பதால் Molongகிற்கு அவசர உதவிக் குழுவை அனுப்பும் பணியில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது.

Latest news

11 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆஸ்திரேலியாவின் பண விகிதம் 4% ஐத் தாண்டியது

11 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியதால் ஆஸ்திரேலியாவின் பணவீக்கம் 04 சதவீதத்தை தாண்டியுள்ளது.

விக்டோரியாவில் ஆரம்பநிலைக்கு கார் பதிவு இலவசம்

விக்டோரியா மாகாணத்தில் தொழிற்பயிற்சி படிக்கும் பயிற்சியாளர்களுக்கு அவர்களின் கார்களை இலவசமாக பதிவு செய்வதற்கான புதிய திட்டத்தை விக்டோரியா மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

மாரிசன் காலத்தில் பல சுகாதாரத் திட்டங்களில் பணம் தவறாகப் பயன்படுத்தப்பட்டது

ஸ்காட் மொரிசனின் ஆட்சிக் காலத்தில் சுகாதாரம் மற்றும் வைத்தியசாலைத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான கணக்காய்வு அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் TikTok பயன்பாடு குறித்த முதல் அதிகாரப்பூர்வ அறிக்கை

ஆஸ்திரேலியாவில் TikTok பயனர்கள் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் முதல் முறையாக வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஆஸ்திரேலிய மக்கள்தொகையில் 30 சதவீதம்...

ஆஸ்திரேலியாவில் TikTok பயன்பாடு குறித்த முதல் அதிகாரப்பூர்வ அறிக்கை

ஆஸ்திரேலியாவில் TikTok பயனர்கள் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் முதல் முறையாக வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஆஸ்திரேலிய மக்கள்தொகையில் 30 சதவீதம்...

37 ஆண்டு சாதனையை முறியடித்த பெர்த் மழை

37 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜூன் மாதத்தில் ஒரு நாளில் பெர்த்தில் பெய்த கனமழை கடந்த 24 மணி நேரத்தில் பதிவாகியுள்ளது.