ஆஸ்திரேலிய வீரர்களுக்கு மரியாதை செலுத்தி கெளரவிக்கும் வகையில் New Southwales Sports என்ற அமைப்பு நடாத்துகின்ற NSW Hall of Champions என்ற மண்டபத்தில் பிரசாந்த் செல்லதுறை என்ற தமிழரின் பெயர் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த மண்டபத்தில் கௌரவிக்கின்ற முதல் தமிழர் என்ற பெருமையுடன் முதல் ஆசிய நாட்டவர் என்ற பெருமையும் இவரையே சாரும்.
சிட்னியில் உள்ள ஒலிம்பிக் park-ல் Sports New South Wales ஆஸ்திரேலியாவில் இருக்கும் பல்வேறு விளையாட்டு வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அவர்களின் பெயர்களும் அவர்களுடைய சில பொருட்களும் காட்சிப்படுத்தப்படும்.
ஜிம்னாஸ்ட் (gymnast) பிரசாந்த் செல்லதுறை 2006 மற்றும் 2010 நடைபெற்ற Commonwealth போட்டிகளில் 5 பதக்கங்களையும், உலக கோப்பை போட்டிகளில் 5 பதக்கங்களையும், உலகதரத்திலே 3 பதக்கங்களையும் வென்றுள்ளார்.
சிறுவயதிலிருந்தே துடிதுடிப்புடன் இருந்த பிரசாந் தனது 5 வயதில் வீட்டின் கூரை மேல் அடிக்கடி ஏறி நிற்பதை பார்த்து வைத்தியரான தன் அம்மாவிடம் சிகிச்சை பெற வந்தவர்கள் ”இந்த பையன் ஜிம்னாஸ்டிக் செய்கிறாரா?” என கேட்ட போதுதான் அம்மாவிற்கு அந்த சிந்தனை தோன்றியது. இதன் பின்னரே பிரசாந்த் ஜிம்னாஸ்டிக் வகுப்புகளுக்கு சேர்க்கப்பட்டார்.
தனது 11 வயதிலிருந்து New South Wales institute of Sport அமைப்பில் சேர்ந்து பயிற்சிபெற்று இந்த போட்டிகளில் பங்குபற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.