Newsடுவிட்டர் நிறுவனத்திலிருந்து பதவி விலகுகிறாரா Elon Musk?

டுவிட்டர் நிறுவனத்திலிருந்து பதவி விலகுகிறாரா Elon Musk?

-

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலோன் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை  கைப்பற்றியதிலிருந்து, அதில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

குறிப்பாக டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயற்பாட்டு அதிகாரி- பராக் அகர்வால் உட்பட முக்கிய பதவிகளில் கடமையாற்றி வந்த பலரை பணிநீக்கம் செய்தார்.

அத்துடன் டுவிட்டரில் அதிகாரபூர்வக்  கணக்குகளுக்கு வழங்கப்படும் ‘நீல வண்ண டிக்’ குறியீட்டினைப் பயன்படுத்துவதற்கு  8 டொலர்கள் வசூலிக்கும் திட்டத்தினையும் அமுல்படுத்தினார்.

அத்துடன்  தனிப்பட்ட நபர்களின் தகவல்களை வெளியிடுவதாகக் கூறி, பிரபல ஊடகவியலாளர்களின் டுவிட்டர் கணக்குகளையும் முடக்கி  வருகின்றார்.

இந்நிலையில் எலோன் மஸ்கின் இத்தகைய செயற்பாடுகள் மக்கள் மத்தியில்  மன உளைச்சலை ஏற்படுத்துவதாக ஐ.நாவின் உலகளாவிய தகவல் தொடர்புகளுக்கான துணைப் பொதுச்செயலாளர் மெலிசா பிளவ்மிங் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து தற்போது ”டுவிட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து நான்  விலக வேண்டுமா? ”என்ற கருத்துக்கணிப்பை எலான் மஸ்க் தொடங்கியுள்ளார்.

இக் கருத்துக் கணிப்பின் படி 57.6 சதவீதத்திற்கும் அதிகமான பயனர்கள் ‘ஆம்’ என்றும், சுமார் 42.4 சதவீதம் பேர் ‘இல்லை’ எனவும் பதில் அளித்துள்ளனர்.

முன்னதாக, டுவிட்டரின் தலைமை நிர்வாக அதிகாரியாக நீண்ட காலம் பணியாற்ற விரும்பவில்லை எனவும், அவ்வேலைக்கு வேறு ஒருவரைக் நியமிப்பேன் என்றும்  சூசகமாகத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

ஆஸ்திரேலியாவில் மலிவு விலையில் வீடுகள் காணப்படும் பகுதிகள்

வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு புதிய வீடு வாங்குபவர்களுக்கு ஆஸ்திரேலியாவின் மிகக் குறைந்த விலையில் உள்ள புறநகர்ப் பகுதிகளை ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. சிட்னி, பிரிஸ்பேன்,...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் உயர்ம் பியர் விலை

அவுஸ்திரேலியாவில் பியர் மீதான வரி அடுத்த வாரம் மீண்டும் அதிகரிக்கப்படுவதால் பியர் விலை உயரும் என ஊகங்கள் வெளியாகியுள்ளன. இந்த வரி அதிகரிப்பு நிதிப் பிரச்சினைகளை எதிர்நோக்கும்...

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் கறுப்புச் சந்தையாக உள்ள ரஷ்யா!

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரியிலிருந்து இன்று வரையில் போர் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ரஷிய படைகளால் சிறைபிடிக்கப்பட்ட உக்ரைன் போர்க் கைதிகளின் உடல்கள்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

ஒலிம்பிக் சரித்திரம் படைத்த ஆஸ்திரேலியாவின் ரக்பி அணி

இந்த வருட ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஏழு பேர் கொண்ட ரக்பி போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இன்று காலை பாரிஸில் நடைபெற்ற ஆட்டத்தில்...