ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பிரிஸ்பேனில் நடந்த தொடக்க டெஸ்டில் 2-வது நாளிலேயே தென்ஆப்பிரிக்காவை சுருட்டிய ஆஸ்திரேலியா மெல்போர்னில் நடந்த 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் வெற்றியை பெற்று தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் கடந்த 4ம் திகதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய தொடக்க வீரர் டேவிட் வார்னர் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதனையடுத்து மற்றோரு தொடக்க வீரருடன் களமிறங்கிய மர்னஸ் லபுசனே, நிதனமாக விளையாடி ரன்களை சேர்த்தார். போட்டியின் நடுவே லபுசனேவின் ஹெல்மேட்டில் திடீர் எதோ கோளாறு ஏற்பட்டது.அப்போது அவர் டிரெஸிங் ரூமை கையை காட்டி சிகரெட் லைட்டர் சைகையாக காண்பித்து எடுத்து வரசொன்னார்.