Cinemaமன்னிப்பு கேட்ட மனோபாலா - காரணம் என்ன?

மன்னிப்பு கேட்ட மனோபாலா – காரணம் என்ன?

-

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு படம் எதிர்வரும் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது.

இந்த நிலையில் அப்படத்தின் பாடல்கள், இசை விழா என்று நடைபெற்ற நிலையில் இன்று ட்ரைலர் வெளியாகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், மாஸ்டர் படத்தை அடுத்து மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கும் தனது 67ஆவது படத்தில் நடிக்கிறார் விஜய்.

இந்த படத்தின் பூஜை கடந்த மாதமே நடைபெற்ற நிலையில் படப்பிடிப்புக்கான ஆரம்பகட்ட பணிகளை மேற்கொண்டு வந்தார் லோகேஷ் கனகராஜ்.

இந்த நிலையில் இயக்குனரும் நடிகருமான மனோபாலா சில தினங்களுக்கு முன்பு விஜய் 67 படம் குறித்து தனது ட்விட்டரில் ஒரு அப்டேட் கொடுத்திருந்தார்.

அதில், தளபதி- 67 படம் முதல் நாள் சூட்டிங் மிகச் சிறப்பாக இருந்தது. விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜை சந்தித்தேன். முதல் நாளே நன்றாக இருந்தது என்று பதிவிட்டு இருந்தார்.

அவரது இந்த பதிவு இணையத்தில் வேகமாக பரவி வந்தது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் முன்பே அவர் இந்த பதிவை வெளியிட்டதால் படக்குழுவிடம் இருந்து அவருக்கு எதிர்ப்பு எழுந்ததை அடுத்து அந்த பதிவை நீக்கிவிட்டார் மனோபாலா.

அதோடு, நான் பதிவிட்டதை நீக்கி விட்டேன். என்னை மன்னித்து விடுங்கள் என்றும் அவர் கூறியிருந்தார். பின்னர் அவர் எந்த பதிவும் போடவில்லை. இதையடுத்து விஜய் ரசிகர்கள் அவரை மோசமாக ட்ரோல் செய்து வந்தனர்.

இந்நிலையில் அவர் மீண்டும் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், எனக்கு யாரோ ஒருவர் கால் பண்ணி ட்விட்டரில் இருந்தே விலகி விட்டீர்களோ? என்று கேட்டார். அதற்கு இல்லை என பதில் கொடுத்தேன் என்று ஒரு பதிவு போட்டுள்ளார் மனோபாலா.

Latest news

குழந்தைகளுக்கு மேலும் 2 சமூக ஊடக தளங்களுக்கு தடை

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 10 முதல் அமலுக்கு வரும் இந்தப் புதிய சட்டத்தில்...

ஆஸ்திரேலியாவில் 3.5 மில்லியன் மக்களைப் பாதிக்கும் ஒரு பிரச்சினை

ஆஸ்திரேலியாவில் சுமார் 20% குடும்பங்கள் தற்போது உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவு வங்கியின் 2025 அறிக்கையின்படி, கடந்த ஆண்டு 3.5 மில்லியன் ஆஸ்திரேலியர்கள் உணவுப் பாதுகாப்பின்மையை...

டாஸ்மேனியாவிற்கு 450 கூடுதல் Skilled Visa வாய்ப்புகள்

ஆஸ்திரேலிய அரசாங்கம் டாஸ்மேனியாவிற்கான திறமையான விசா பரிந்துரை இடங்களுக்கு இடைக்கால ஏற்பாடு செய்துள்ளது. இந்த ஏற்பாடு டாஸ்மேனியாவிற்கு கூடுதலாக 450 இடங்களை வழங்கும். அதன்படி, இடம்பெயர்வு டாஸ்மேனியா வாராந்திர...

ஆஸ்திரேலியாவின் தனிநபர் கடன் துறை பற்றி எச்சரிக்கை

ஆஸ்திரேலிய பத்திரங்கள் மற்றும் முதலீட்டு ஆணையம் (ASIC), ஆஸ்திரேலியாவின் வேகமாக வளர்ந்து வரும் தனிநபர் கடன் துறையை உன்னிப்பாகக் கவனித்துள்ளது. 200 பில்லியன் டாலர் மதிப்புள்ள தனியார்...

மெல்பேர்ண் CBD-யில் 2 பாலங்களில் மோதிய ஒரு லாரி

மெல்பேர்ண் CBD-யின் இரண்டு பகுதிகளில் நேற்று மதியம் ஒரே லாரி இரண்டு பாலங்களில் மோதியதால் ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. முதல் விபத்து பிற்பகல்...

குழந்தைகளுக்கு இதய நோய் அபாயத்தைக் குறைக்கும் கோவிட்-19 தடுப்பூசி

COVID-19 வைரஸுக்கு எதிரான தடுப்பூசிகள் குழந்தைகளுக்கு இதய நோய் வருவதைத் தடுப்பதற்குப் பதிலாக, அவர்களின் இதய நோய் அபாயத்தைக் கணிசமாகக் குறைக்கின்றன என்று ஒரு புதிய...