Cinemaமன்னிப்பு கேட்ட மனோபாலா - காரணம் என்ன?

மன்னிப்பு கேட்ட மனோபாலா – காரணம் என்ன?

-

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு படம் எதிர்வரும் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது.

இந்த நிலையில் அப்படத்தின் பாடல்கள், இசை விழா என்று நடைபெற்ற நிலையில் இன்று ட்ரைலர் வெளியாகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், மாஸ்டர் படத்தை அடுத்து மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கும் தனது 67ஆவது படத்தில் நடிக்கிறார் விஜய்.

இந்த படத்தின் பூஜை கடந்த மாதமே நடைபெற்ற நிலையில் படப்பிடிப்புக்கான ஆரம்பகட்ட பணிகளை மேற்கொண்டு வந்தார் லோகேஷ் கனகராஜ்.

இந்த நிலையில் இயக்குனரும் நடிகருமான மனோபாலா சில தினங்களுக்கு முன்பு விஜய் 67 படம் குறித்து தனது ட்விட்டரில் ஒரு அப்டேட் கொடுத்திருந்தார்.

அதில், தளபதி- 67 படம் முதல் நாள் சூட்டிங் மிகச் சிறப்பாக இருந்தது. விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜை சந்தித்தேன். முதல் நாளே நன்றாக இருந்தது என்று பதிவிட்டு இருந்தார்.

அவரது இந்த பதிவு இணையத்தில் வேகமாக பரவி வந்தது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் முன்பே அவர் இந்த பதிவை வெளியிட்டதால் படக்குழுவிடம் இருந்து அவருக்கு எதிர்ப்பு எழுந்ததை அடுத்து அந்த பதிவை நீக்கிவிட்டார் மனோபாலா.

அதோடு, நான் பதிவிட்டதை நீக்கி விட்டேன். என்னை மன்னித்து விடுங்கள் என்றும் அவர் கூறியிருந்தார். பின்னர் அவர் எந்த பதிவும் போடவில்லை. இதையடுத்து விஜய் ரசிகர்கள் அவரை மோசமாக ட்ரோல் செய்து வந்தனர்.

இந்நிலையில் அவர் மீண்டும் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், எனக்கு யாரோ ஒருவர் கால் பண்ணி ட்விட்டரில் இருந்தே விலகி விட்டீர்களோ? என்று கேட்டார். அதற்கு இல்லை என பதில் கொடுத்தேன் என்று ஒரு பதிவு போட்டுள்ளார் மனோபாலா.

Latest news

மூழ்கி வரும் சீனாவின் பல முக்கிய நகரங்கள்

சீனாவின் முக்கிய நகரங்களில் சுமார் 270 மில்லியன் மக்கள் மூழ்கும் நிலத்தில் வாழ்கின்றனர் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. மனித செயல்பாடு சீனாவின் முக்கிய நகரங்களில்...

ஆஸ்திரேலியாவில் உள்ள மனநல மருத்துவர்களின் வேண்டுகோள்

மனநல சேவை நிபுணர் பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு தலையிட வேண்டும் என மனநல மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த மாதம், 500க்கும் மேற்பட்ட மனநல மருத்துவர்கள்,...

எறும்புகளால் $22 பில்லியன் செலவாகும் என அபாயம்

நெருப்பு எறும்புகளால் ஆஸ்திரேலியாவில் 2040 ஆம் ஆண்டில் $22 பில்லியன் செலவாகும் என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. இந்த எறும்புகள் ஆஸ்திரேலியாவின் மிக மோசமான ஆக்கிரமிப்பு பூச்சிகளில்...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் வேலையின்மை விகிதம்

ஆஸ்திரேலியாவின் வேலையின்மை விகிதம் கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளது. அதன்படி, மார்ச் மாதத்தில் 6600 பேர் வேலை இழந்த பிறகு, வேலையின்மை விகிதம் 3.7ல் இருந்து...

எறும்புகளால் $22 பில்லியன் செலவாகும் என அபாயம்

நெருப்பு எறும்புகளால் ஆஸ்திரேலியாவில் 2040 ஆம் ஆண்டில் $22 பில்லியன் செலவாகும் என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. இந்த எறும்புகள் ஆஸ்திரேலியாவின் மிக மோசமான ஆக்கிரமிப்பு பூச்சிகளில்...

மெல்போர்னைச் சுற்றி அதிக வீட்டுத் தேவை உள்ள பகுதிகள் அடையாளம்

மெல்போர்ன் பெருநகரில் அதிக வீட்டு தேவை உள்ள பகுதிகளை கண்டறிய புதிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, மெல்பேர்னின் 19 உள் பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இந்த ஆய்வு...