Newsஅதிரடி மாற்றங்களுடன் Twitter - Elon Musk அறிவிப்பு!

அதிரடி மாற்றங்களுடன் Twitter – Elon Musk அறிவிப்பு!

-

இந்த நவீன உலகில் அனைத்துமே இணையதளங்களிலேயே இடம்பெற்று வருகிறது. பொருட்கொள்வனவு முதல் அனைத்திற்கும் தனித்தனியாகச் செயலிகள் வந்துவிட்டன. இதனால் பலரும் இணையதளங்களையே நம்பி உள்ளனர்.

இந்தநிலையில், எலான் மஸ்க் புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளார். அதில் “ப்ளூ டிக்கிற்கு இனி மாதம் 8 டொலர் (இந்திய மதிப்பில் ரூ.660) கட்டணம் வசூல் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக அவர் சில ட்விட்டர் பதிவுகள் செய்துள்ளார்.

அதில், “ப்ளூடிக் வாங்கும் நாடுகளை பொறுத்து விலை நிர்ணயம் செய்யப்படும். இதன்மூலம் பெயர் தேடல் மற்றும் பதில்களில் உங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் நீண்ட நெடிய வீடியோ மற்றும் ஒடியோவை பதிவேற்ற வாய்ப்பு வழங்கப்படும். அதோடு விளம்பங்கள் பாதியாக குறைக்கப்படும்” என தெரிவித்தார்.

இந்தநிலையில், எலான் மாஸ் இன்று காலை ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில்,

ட்விட்டரில் நீண்ட வடிவிலான செய்தியை அனுப்பும் வசதி அறிமுகப்படுத்தப்படும். ட்விட்டரின் பயனரின் உரையில் பல மாற்றங்கள் இருக்கும் என பட்டியலிட்டுள்ளார், அது விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். பரிந்துரைக்கப்பட்ட மற்றும் பின்தொடரும் ட்வீட்களுக்கு இடையில் செல்ல வலது/இடதுபுறம் எளிதாக ஸ்வைப் செய்யவும். இந்த வார இறுதியில் வெளியிடப்படும் என அதில் கூறியுள்ளார்.

எனினும், நீண்ட பதிவுகளை வெளியிட அனுமதி வழங்கினால் அதனால் ட்விட்டருக்கு தனித்தன்மை என்பது இல்லாமல் போய் விடும் என பலர் எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியாவில் மலிவு விலையில் வீடுகள் காணப்படும் பகுதிகள்

வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு புதிய வீடு வாங்குபவர்களுக்கு ஆஸ்திரேலியாவின் மிகக் குறைந்த விலையில் உள்ள புறநகர்ப் பகுதிகளை ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. சிட்னி, பிரிஸ்பேன்,...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் உயர்ம் பியர் விலை

அவுஸ்திரேலியாவில் பியர் மீதான வரி அடுத்த வாரம் மீண்டும் அதிகரிக்கப்படுவதால் பியர் விலை உயரும் என ஊகங்கள் வெளியாகியுள்ளன. இந்த வரி அதிகரிப்பு நிதிப் பிரச்சினைகளை எதிர்நோக்கும்...

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் கறுப்புச் சந்தையாக உள்ள ரஷ்யா!

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரியிலிருந்து இன்று வரையில் போர் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ரஷிய படைகளால் சிறைபிடிக்கப்பட்ட உக்ரைன் போர்க் கைதிகளின் உடல்கள்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

ஒலிம்பிக் சரித்திரம் படைத்த ஆஸ்திரேலியாவின் ரக்பி அணி

இந்த வருட ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஏழு பேர் கொண்ட ரக்பி போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இன்று காலை பாரிஸில் நடைபெற்ற ஆட்டத்தில்...