News லண்டனில் வாழ்க்கை செலவினங்களை பூர்த்தி செய்ய முடியாமல் திண்டாடும் வெளிநாட்டவர்கள்!

லண்டனில் வாழ்க்கை செலவினங்களை பூர்த்தி செய்ய முடியாமல் திண்டாடும் வெளிநாட்டவர்கள்!

-

லண்டனில் இந்திய பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கடும் நெடுக்கடிக்கு உள்ளாகியுள்ளனர். காரணம் வீட்டு வாடகை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு வேலை மற்றும் கல்விக்காக செல்லும் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர், பெரும்பாலும் வீடுகளை குத்தகை அல்லது வாடகைக்கு எடுத்து தங்குவது வழக்கம். கடந்த 3 ஆண்டுகளில் கொரோனா அச்சுறுத்தலால் பலரும் சொந்த ஊர் திரும்பியதால், பல வீடுகள் காலியாகின. 

தற்போது இயல்பு நிலை திரும்பி வருவதால், மீண்டும் லண்டனுக்கு வரும் வெளிநாட்டினர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

இதனால் வாடகை வீடுகளுக்கான பெறுமதி அதிகரித்துள்ளது. அதன் தாக்கமாக வாடகையை உயர்த்துவதில் வீட்டு உரிமையாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். 

லண்டனில் ஒரு மாத சராசரி வீட்டு வாடகை இந்திய மதிப்பில் 2 ,50,000 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஒரு சிலர் வீட்டு உரிமையாளர்கள் மாதம் 3 லட்சம் ரூபாய் வரை வாடகை வசூலிப்பதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு மட்டும் 9.7 சதவீதம் வாடகை உயர்ந்துள்ளது. லண்டனில் உயர்ந்தப்பட்ட மின்சார கட்டணத்துடன், வாழ்க்கைச் செலவினங்களை பூர்த்தி செய்ய முடியாமல் பலர் திண்டாடி வரும் நிலையில், வாடகை உயர்வு கூடுதல் சுமையாகி உள்ளது.

நன்றி தமிழன்

Latest news

இங்கிலாந்தில் வாழும் இந்து மக்கள் தொடர்பில் வெளியான தகவல்

இங்கிலாந்து நாட்டில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஆன்லைன் வழியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன் அடிப்படையில்,...

கொசுக்கடியால் கை கால்களை இழந்த நடனக் கலைஞர்!

கொசு தானே என்ற அலட்சியம் வேண்டாம். அது ஒருவரது வாழ்க்கையை புரட்டிப் போடும் வல்லமை படைத்தது என்பதை பிரித்தானியாவில் நடந்த சம்பவம் உறுதிபடுத்தியுள்ளது....

“கவலைப்படாதே சகோதரா”- நியூசிலாந்து அரசின் புதிய பிரசாரம்!

காதல் தோல்வியகளிலிருந்து இளைஞர்கள் மீண்டுவர “LOVE BETTER” என்ற பிரசாரத்தை நியூசிலாந்து அரசு முன்னெடுத்துள்ளது. இதற்காக அந்நாட்டு அரசு...

சமூக ஊடகங்களை பயன்படுத்த சிறுவர்களுக்கு புதிய கட்டுப்பாடு

அமெரிக்க உட்டா மாகாணத்தில் முதன்முதலாக சமூக ஊடகங்களை பயன்படுத்த சிறுவர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கும் வகையில் மசோதா கொண்டு வரப்பட்டது. 

மெட்டா நிறுவனம் தொடர்பில் பெண் ஊழியர் பகிர்ந்த அனுபவம்

மெட்டா நிறுவனத்தின் முன்னாள் பெண் ஊழியரான மேடலின் மசாடோ என்பவர் டிக்டாக் வீடியோ ஒன்றில் வெளியிட்ட செய்தியில், வேலையில் எதுவும் செய்யாமல் ஓராண்டுக்கு...

நாளை வானில் நிகழப்போகும் அதிசயம் – விஞ்ஞானிகள் தெரிவித்த முக்கிய விடயம்

இந்த வாரம் வானில் நிகழப்போகும் அதிசயத்தைக் காண நீங்கள் தயாரா என்று வானியல் விஞ்ஞானிகள் கேட்கின்றனர்?அப்படி என்ன அதிசயம் நடக்கப்போகிறது என்று கேட்கிறீர்களா?...