Sportsகால்பந்து உலக கோப்பை 2026-ல் விளையாடுவது மிகவும் கடினம் - மெஸ்ஸி...

கால்பந்து உலக கோப்பை 2026-ல் விளையாடுவது மிகவும் கடினம் – மெஸ்ஸி தெரிவிப்பு!

-

எதிர்வரும் கால்பந்து உலக கோப்பை 2026 தொடரில் விளையாடுவது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். 

அர்ஜென்டினா கால்பந்தாட்ட அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி அர்ஜென்டினா நாட்டின் நாளேடு ஒன்றுக்கு பேட்டி கொடுத்தபோது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அனைத்து விளையாட்டு வீரர்களும் தங்கள் அணிதான் வெற்றி பெற வேண்டும் என விரும்புவார்கள். அதுவும் உலகக் கோப்பை மாதிரியான தொடர் என்றால் சொல்லவே வேண்டாம். கோப்பையை வெல்ல வேண்டும் என்ற துடிப்பு ஒவ்வொரு வீரரின் இதயத்துடிப்பு போலவே இருக்கும். 

அதுவும் அதில் மெஸ்ஸி விளையாடினால் அவரோடு சேர்த்து அவரது மில்லியன் கணக்கான ரசிகர்களின் துடிப்பும் அதில் இருக்கும்.

கடந்த டிசம்பரில் உலகக் கோப்பை கனவை அதே துடிப்போடு மெஸ்ஸி நிஜமாக்கினார். அர்ஜென்டினா அணியை திறம்பட வழிநடத்தி, தொடரில் தன் சார்பாக 7 கோல்களை பதிவு செய்து கோப்பையை வென்று காட்டினார். இறுதிப் போட்டிக்கு பிறகு ஓய்வு முடிவையும் மாற்றிக் கொண்டார்.

எனது வயது காரணமாக 2026 உலக கோப்பை தொடரில் விளையாடுவது மிகவும் கடினம்தான். அதற்கு இன்னும் நீண்ட நாட்கள் உள்ளது. எனக்கு கால்பந்து விளையாடுவது மிகவும் பிடிக்கும். 

நான் நல்ல உடற்திறனோடும், அதே ரசனையோடும் இருந்தால் நிச்சயம் அதை தொடருவேன். ஆனால், அது எனது கெரியரின் போக்கை பொறுத்தே அமையும் என மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.

அர்ஜென்டினா அணியின் பயிற்சியாளரும் அடுத்த உலகக் கோப்பை தொடரில் மெஸ்ஸி விளையாடுவார் என தான் நம்புவதாக கடந்த மாதம் தெரிவித்திருந்தார். அவரது வாய்ப்புக்கான கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

நன்றி தமிழன்

Latest news

விக்டோரியாவில் தேர்வுகள் தொடர்பில் மாநில அரசு விடுத்துள்ள உத்தரவு

விக்டோரியாவில் உள்ள பள்ளிகளில் 12 ஆம் ஆண்டு தேர்வுகளை மேற்பார்வையிடும் அமைப்பை மறுஆய்வு செய்ய மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. பரீட்சை தொடர்பான சில மாணவர்களுக்கு இணையத்தில் மாதிரி...

விக்டோரியா பிரதமரின் தலைமைத்துவம் பற்றி எழுந்துள்ள கேள்வி

விக்டோரியா பிரதமர் ஜெசிந்தா ஆலன் தலைமையில் மாநில அரசு பிளவுபட்டுள்ளதாக விக்டோரியா எதிர்க்கட்சித் தலைவர் ஜான் பெசுடோ தெரிவித்துள்ளார். ஊடகங்களிடம் பேசிய அவர், தொழிலாளர் கட்சி எம்.பி.க்கள்...

NSW போக்குவரத்து அபராத முறையில் ஏற்படவுள்ள மாற்றம்

நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு டிக்கெட் இல்லாமல் பார்க்கிங் அபராதம் விதிக்க தடை விதித்துள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த அபராத முறையின்...

ஒவ்வொரு 10 நாட்களுக்கும் இலங்கை செல்லும் 5 ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள்

நவம்பர் மாதம் முதல் 10 நாட்களில் 61 ஆயிரத்து 767 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி நவம்பர் மாதம் முதல் 10 நாட்களில் ஒரு...

ஒவ்வொரு 10 நாட்களுக்கும் இலங்கை செல்லும் 5 ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள்

நவம்பர் மாதம் முதல் 10 நாட்களில் 61 ஆயிரத்து 767 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி நவம்பர் மாதம் முதல் 10 நாட்களில் ஒரு...

உலகின் மிகப்பெரிய பவளப்பாறை கண்டுபிடிப்பு

தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் உலகின் மிகப்பெரிய பவளப்பாறையை கண்டுபிடிப்பதில் விஞ்ஞானிகள் குழு வெற்றி பெற்றுள்ளது. இது 300 ஆண்டுகளுக்கு மேல் பழமையானதாகவும், நீல திமிங்கலத்தை விட பெரியதாகவும்...