News 20 ஆண்டுகளாக மெத்தைகளை உண்ணும் வினோத பெண்!

20 ஆண்டுகளாக மெத்தைகளை உண்ணும் வினோத பெண்!

-

அமெரிக்காவை சேர்ந்த ஜெனிபர்(வயது 25) என்ற பெண் ஒருவர் மெத்தைகளை உண்ணும் வினோத பழக்கத்தை கொண்டுள்ளார்.

அதுவும் இன்று, நேற்று அல்ல கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக இந்த விசித்திர பழக்கத்துக்கு அவர் அடிமையாகியுள்ளாராம். 

அந்த பெண் பிரபல அமெரிக்க டி.வி. சேனலில் ஒளிபரப்பாகும் ‘என் விசித்திரமான போதை’ என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கூறியபோதே அவரின் இந்த வினோத பழக்கம் வெளியுலகத்துக்கு தெரியவந்துள்ளது.

தனது 5 வயதில் இருந்தே மெத்தையை சாப்பிடுவதை பழக்கமாக கொண்டிருப்பதாகவும், முதன் முதலில் கார் சீட்டில் இருந்த பஞ்சுகளை எடுத்து சாப்பிட ஆரம்பித்ததாகவும் ஜெனிபர் கூறுகிறார். 

நாட்கள் செல்லசெல்ல பழக்கம் மோசமானதே தவிர, அதனை விட்டொழிக்க முடியவில்லை என்றும், தற்போது ஒருநாளில் ஒரு சதுர அடி மெத்தையை உண்ணும் அளவுக்கு அதற்கு அடிமையாகிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். 

ஒருசமயம் தனது மெத்தை முழுவதையும் சாப்பிட்டு முடித்த பின்னர் தனது தாயாரின் மெத்தையையும் சாப்பிட்டு முடித்தாரம் ஜெனிபர். எனினும் அதிர்ஷ்டவசமாக ஜெனிபரின் இந்த பழக்கமானது அவரது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் எந்தவித உடல்நல பாதிப்புகளையும் இதுவரை ஏற்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது.

அதேசமயம், ஜெனிபருக்கு உடல் பருமன் அதிகரித்து இருப்பதால், மெத்தையை சாப்பிடுவதை நிறுத்தாவிட்டால், எதிர்பாராத உடல்நல பிரச்சினைகளுக்கு ஆளாகலாம் என வைத்தியர்கள் எச்சரிக்கின்றனர்.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியாவில் உள்ள McDonald’s உணவகங்களில் கவுண்டர்களுக்கு முன்னால் ஒரு பிளாஸ்டிக் கவர்

அவுஸ்திரேலியாவில், துரித உணவு உணவக சங்கிலி அதன் உணவகங்களின் கவுன்டர்களுக்கு முன்னால் பிளாஸ்டிக் கவரைப் பயன்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

குயின்ஸ்லாந்து பொது போக்குவரத்து சேவைகளில் பெரிய மாற்றம்

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் பயணிகள் போக்குவரத்து பேருந்து சேவைகளுக்கான கட்டண முறையை எளிமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்காலத்தில் ஸ்மார்ட்போன்,...

பல தசாப்தங்களுக்குப் பிறகு, ரிசர்வ் வங்கிக்கு இன்று திருத்த அறிக்கை

ஆஸ்திரேலியாவின் பெடரல் ரிசர்வ் வங்கியில் அறிமுகப்படுத்தப்பட உள்ள சீர்திருத்தங்கள் அடங்கிய அறிக்கையை மத்திய கருவூல அமைச்சர் ஜிம் சால்மர்ஸ் இன்று பெற உள்ளார்.

கன்பரா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபருக்கு 3 வருட சிறைத்தண்டனை

கடந்த ஆகஸ்ட் மாதம் கன்பரா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபருக்கு 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.